வியாழன், 2 மே, 2019

பாதாள சாக்கடைக்குள் மனிதன் இறங்காமல் தடுக்க வக்கற்ற அரசுகளும் .. மக்களும் !

LR Jagadheesan : பாதாள சாக்கடைதிட்டத்தை நிறைவேற்றுவதில் காட்டும் ெய்த மழையாக எந்த சுரணையும் இன்றி சகித்துக்கொள்ளச் செய்கிறது.
அக்கறை, வேகம், தீவிரத்தை அது அடைத்துக்கொண்டால் அதை மனிதர்கள் இறங்காமல் சீர் செய்யமுடிகிற விதத்தில் வடிவமைத்து திட்டமிட்டு கட்டவேண்டும் என்பதில் ஏன் நாம் காட்டுவதில்லை? ஏனென்றால் நமக்குத்தெரியும் நாம் அதில் ஒருநாளும் இறங்கப்போவதில்லை; காசு கொடுத்தால் அதை செய்ய வேறு யாரோ ஆட்கள் இருக்கிறார்கள்; கிடைப்பார்கள்; அரசாங்கமே அதற்கு உதவும் என்கிற பணத்திமிரும் ஜாதி ஆணவமும் தான் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கூட இந்த குரூரத்தை நாம் எருமை மேல் ப
இல்லாவிட்டால் இதெல்லாம் எவ்வளவு பெரிய scandal? கேவலம்? மனிதத்தை கொல்லும் செயல்? இந்த லெட்சணத்தில் எல்லா கிராமப்புறங்களிலும் திறந்தவெளியில் மலம் கழித்தலை தடுக்க அரசுகள் மானியவிலையிலும் இலவசமாகவும் கழிவறைகள் கட்ட கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் செலவு வேறு செய்கிறது.

உரிய தண்ணீர் வசதியோ மின்சாரவசதியோ இல்லாத இடங்களில் இத்தகைய இலவச/அரசு மானியத்தால் கட்டப்படும் கழிவறைகள் உரிய பலன் தருமா என்கிற கேள்வி ஒருபக்கம் இருக்க, பாதாள சாக்கடைக்குள் மனிதன் இறங்காமல் தடுக்க வக்கற்ற அரசுகளுக்கு இப்படியான இலவச/அரசு மானிய கழிவறைகளை கட்ட அருகதை இருக்கிறதா என்கிற அடிப்படை கேள்வியை நாம் எழுப்பவேண்டும்.
நிலவுக்கும் புதனுக்கும் செயற்கைக்கோள்களை அனுப்பும் திறன் பெற்ற ஒரு தேசமும் அதன் விஞ்ஞானமும் இந்த சிறிய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்பதை ஏற்கவே முடியாது. நம்மிடம் மனமில்லை. ஏனென்றால் நாம் கழிப்பதை கையால் அள்ள ஒருவரல்ல இருவரல்ல ஒரு ஜாதியையே நேர்ந்துவிட்டிருக்கிறோம் என்கிற ஜாதித்திமிர். அது அழியாதவரை இதெல்லாம் தீராது.
எதெதற்கோ போர்க்கால அடிப்படையில் தீர்வு கோருகிறார்கள். உண்மையில் இதற்குத்தான் அத்தகைய போர்க்கால அடிப்படையில் தீர்வுகாணவேண்டும்

கருத்துகள் இல்லை: