ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

கேரளாவில் தேசிய புலனாய்வு விசாரணை.. இலங்கை குண்டுவெடிப்பு...

தினமலர் :சென்னை : இலங்கையில் கடந்த வாரத்தில் நடந்த மோசமான குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பந்தமாக, கேரளாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர். >இலங்கை தலைநகர் கொழும்புவில், கடந்த வாரம் ஈஸ்டர் திருநாள் அன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என்று மொத்தம் 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த கொடூர சம்பவத்தில் 253 பேர் கொல்லப்பட்டனர். 400 க்கும் அதிகமானோர் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் செயல்படும் நேஷனல் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு (என்.டி.ஜே.,) க்கும் தொடர்பு இருப்பதாக அந்நாட்டு விசாரணை அமைப்புகள் கண்டறிந்துள்ளன.< இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து இந்திய உளவுத்துறை முன்னரே இலங்கைக்கு தகவல் அளித்துள்ளன. இந்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்தும் இலங்கை அதிகாரிகள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.



சிம்கார்டு, லேப்டாப் சிக்கியது
இந்த நிலையில் இந்தியா சார்பில், அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளும் இலங்கை குண்டுவெடிப்பு விசாரணையில் அந்நாட்டுக்கு உதவி வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், கேரளாவில் 2 இடங்களில் முக்கிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். காசர்கோடு நகரைச் சேர்ந்த 2 பேரிடமும், பாலக்காட்டை சேர்ந்த ஒருவரிடமும் அவர்கள் தங்கி இருந்த வீடுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இங்கு கைப்பற்றப்பட்ட சிம்கார்டு, லேப்டாப் , மற்றும் டிவிடிக்கள் ஆகியவற்றில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
, இலங்கை குண்டுவெடிப்பில் அவர்களுக்கு சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

இந்த சந்தேகம் உறுதியாகும் பட்சத்தில், விசாரணைக்கு பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்படுவர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை: