vikatan.com - syed-abuthahir:
``ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி எதையும்
செய்யத் தயாராக இருக்கிறார். அவருடைய முதல் குறி தினகரன் ஆதரவு
எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்வதுதான்'' எனக் கடந்த பத்து நாள்களுக்கு
முன்பே நாம் குறிப்பிட்டோம். அதற்கான ஆரம்பகட்ட வேலையை இப்போது எடப்பாடி
தரப்பு கையில் எடுத்துவிட்டது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மூவருக்குச்
சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸ் மூவரும்
கிடைக்கப்பெற்றதும் மூவர் தரும் பதிலைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள்
இருக்கப்போகின்றன.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு செக் வைக்க சட்டசபைக்குள் குட்கா கொண்டுவந்த விவகாரம் குறித்த வழக்கு கோர்டில் உள்ளது. அந்த வழக்கை வேகப்படுத்தி தி.மு.கவிற்கு செக் வைக்க எடப்பாடி நினைக்கிறார். ஒருபுறம் தினகரன் தரப்பு செக், மறுபுறம் தி.மு.க வும் நெருக்கடி என எடப்பாடி எட்டடிபாய நினைக்கிறார். குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் பெயரும் பட்டியலில் உள்ளது. இதனால், ஸ்டாலின் ஆட்டம்காணுவார் என எடப்பாடி திட்டமிடுகிறார்.
இந்த விவரம் ஸ்டாலினுக்கு தெரிந்தே, சபாநாயகர் மீது தி.மு.க நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் என்று சொல்லியிருந்தார். மூவருக்கு நோட்டீஸ் வழங்கிய உடனே தி.மு.க தரப்பு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி மனு ஒன்றை சட்டசபை செயலாளரிடம் அளித்துள்ளது. இதனால், சபாநாயகரின் அதிகாரத்தை இரண்டு மாதங்களுக்கு முடக்கிவைக்கத் திட்டமிடுகிறார்கள். இந்த இருவரின் அதிரடியை சபாநாயகரும், எடப்பாடியும் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதே கேள்வியாக உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக