வியாழன், 2 மே, 2019

குஜராத் உருளை கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கு வாபஸ்.. பெப்சி நிறுவனம் அறிவிப்பு

Pepsi withdraws case against 4 potato farmers in Gujarat tamil.oneindia.com - VelmuruganP : அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 4 விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை பெப்சிகோ நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.
பெப்சி நிறுவனம் லேஸ் சிப்ஸ் தயாரிக்க சில உருளைக்கிழங்கு விதைகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது.இந்நிலையில் லேஸ் சிப்ஸ் ரக விதைகளை பெப்சிகோ நிறுவனத்தின் அனுமதியின்றி குஜராத்தின் சபர்கந்தா, ஆரவல்லி மாவட்டத்தைச் சேர்ந்த சில விவசாயிகள் பயிரிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அறிவுசார் சொத்துரிமையின் படி, பெப்சி நிறுவனம் தலா ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு 4 விவசாயிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில இடங்களில் பெப்சி நிறுவனத்தின் செயலை கண்டித்து போராட்டங்களும் நடந்தது.

இதனிடையே குஜராத் அரசு விவசாயிகளுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்தது. மேலும் நீதிமன்றத்திற்கு வெளியே இந்த விவகாரத்தை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என அம்மாநில முதல்வர் நிதின் படேல் தெரிவித்தா. இதனிடையே எப்5 என்று அழைக்கப்படும் லேஸ் தயாரிப்பதற்கான உருளைக்கிழங்குகளை பயிரிடுவதை நிறுத்தினால் வழக்கை வாபஸ் பெறுவதாக பெப்சிகோ நிறுவனம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி அறிவித்தது. இந்நிலையில் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து 4 விவசாயிகளின் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக பெப்சிகோ நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: