புதன், 1 மே, 2019

மேதினம் - 1884 களில் அமெரிக்காவில் உருவான வேலை நேர இயக்கமே மேதினம் உருவாக...

Sundar P : மே தினம் 1806 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
போராட்டத்திற்கு தலைமையேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற போது அங்கே தொழிலாளர்கள் நாளன்றுக்கு 19 முதல் 20 மணி நேரம் வேலை வாங்கப்பட்ட உண்மை வெளியானது.
1820 முதல் 1830 களில் பில்டெல்பியா நகர இயந்திர தொழிலாளர் சங்கம் தான் முதன் முதலில் 10 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன் வைத்தது,
இதன்பின்னரே 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை அனைத்து தரப்பினராலும் பிரதானமாக கோரப்பட்டது.
நியூயார்க் நகரில் ரொட்டி தொழிலாளர்கள் இதே காலத்தில் சுமார் 20 மணி நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர்.
1837ல் “வேன்பியுரன்” தலைமையிலான அரசாங்கம் பத்து மணி நேர வேலைநாள் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இது போராடிய தொழிலாளர்களின் மத்தியில் புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தது.

பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய தொழிலாளர்கள் உடனே 8 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்தனர்.
வளரும் நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன.
ஆஸ்திரேலியாவில் கட்டிட தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற கோரிக்கையை முன் வைத்து 1858ல் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றனர்.
1884 களில் அமெரிக்காவில் உருவான வேலை நேர இயக்கம் தான் மேதினம் உருவாக காரணமாக அமைந்தது.
அரசு தொழிலாளர்களை கைது செய்தது. அமைதியான முறையில் போராட்ட களத்தில் நின்ற தொழிலாளர்களை காவல்துறை சுற்றி வளைத்து தாக்கியது.
அதில் ஏற்பட்ட கலவரத்தையட்டி பல தொழிலாளர்கள் காவல்துறையின் துப்பாக்கி சூட்டிற்கு தங்களது உயிரையும், குருதியையும் தந்தனர்.
தொழிற்சங்க தலைவர்கள் பலர் தூக்கு கயிற்றை முத்தமிட்டனர்.
அவர்களின் அந்த மகத்தான தியாகத்தினால் பெறப்பட்ட வெற்றியே மேதினம்

கருத்துகள் இல்லை: