மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி பல்கலை கழகத்தில் தமிழ் மாணவர்களை மட்டும் குறிப்பாக சுட்டி காட்டி .தமிழ் மாணவர்கள் 500 பேர் படிக்கிறார்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் இதற்கு முற்று புள்ளி வைப்பேன் என்று ஆடியோ பிரசாரத்தில் கூறி வருகிறார். அவருக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் தீவிரமாக பிரசாரம் செய்வது கவனிக்க படவேண்டியது அவசியம் .
மின்னம்பலம் :
ஆம்
ஆத்மி கட்சிக்கு ஆதரவாக டெல்லியில் பிரச்சாரம் செய்யவுள்ளதாக நடிகர்
பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இன்று (மே 4) டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி
நிர்வாகிகளும், பிரகாஷ் ராஜும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது
பேசிய பிரகாஷ் ராஜ், “அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு
ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளேன். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், மாற்றத்தை
நோக்கி ஆம் ஆத்மி கட்சி போராடிக்கொண்டு இருக்கிறது. இத்தகைய கட்சிக்கும்,
அதன் வேட்பாளர்களுக்கும் நான் ஆதரவளிக்க விரும்புகிறேன்.
கல்வி, சுகாதாரம் என பல தளங்களிலும் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆம் ஆத்மி கட்சி குரல் எழுப்பி வருகிறது. நாட்டில் பல்வேறு சிந்தனையோட்டங்கள் கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தை மீட்க வேண்டுமென நான் உறுதியாக நம்புகிறேன். அழிவின் விளிம்பில் இருக்கும் குடியரசை நாம் மீட்டெடுக்க வேண்டும். தற்போது ஆட்சி செய்வோரின் மதவாத, வெறுப்புணர்ச்சி அரசியலால் குடியரசை இழக்கக்கூடிய அபாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது” என்று பேசினார்.
அடுத்த ஒரு வாரத்திற்கு டெல்லியில் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ். வடகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் திலிப் பாண்டேவை ஆதரித்தும், புதுடெல்லியில் பிரிஜேஷ் கோயலையும், கிழக்கு டெல்லியில் ஆதிஷியை ஆதரித்தும் பிரச்சாரம் நடத்தவுள்ளார் பிரகாஷ் ராஜ். கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பிரகாஷ் ராஜ் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக