வெள்ளி, 3 மே, 2019

தமிழகத்தில் படை எடுக்கும் வடமாநில வாக்காளர்கள் / தொழிலாளர்கள் .. காலனியாகிறது தமிழகம் .. சமுகவலையில்...


LR Jagadheesan : தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் தமிழ்நாட்டவர்; தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழ் மொழியை படித்தவர்களுக்கே முழு உரிமை. தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டவருக்கு முன்னுரிமை அல்லது குறிப்பிட்ட விகிதாசார பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதே இந்தியா போன்ற பல்லின; பன்மொழி மக்கள் சேர்ந்து வாழும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டவரின் நியாயமான கோரிக்கையாக இருக்க முடியும்.
தனியார் துறை வேலை வாய்ப்புகளை இப்போதைக்கு இந்த விவாதத்துக்குள் கொண்டுவராமல் இருப்பதே சரி. ஏனெனில் மற்ற மாநிலத்தவர் தமிழ்நாட்டுக்குள் வருவதைப்போலவே; வாழ்வதைப்போலவே ஏராளமான தமிழ்நாட்டவர் வேறு மாநிலங்களுக்கு செல்வதும் வாழ்வதும் இயல்பான ஒன்று. உதாரணமாக மும்பையில் சாலையில் இட்லி விற்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள் தான் ”most eligible bachelors in town” என்று சிரித்தபடியே சொன்னார் மும்பை நண்பர் ஒருவர். அதுவே யதார்த்தமும் கூட. சந்தைப்பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்ட இந்தியா/தமிழ்நாட்டில் இதைப்போன்ற தொழிலாளர் தொழில்முனைவோர் இடப்பெயர்வை யாராலும் தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது. அது இனவாதத்தில் போய் முடியும்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். அதேசமயம் தமிழ்நாட்டு அரசுப்பணியும் இந்திய அரசுப்பணியும் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் தரும் பணிகள். சம்பளம் கொடுக்கும் தமிழ்நாட்டு மக்களே இதில் எஜமானர்கள். தாம் சம்பளம் தரும் தம் பணியாளர்களுக்கான தகுதிகளை நிர்ணயிக்க தமிழ்நாட்டவருக்கு முழு உரிமை உண்டு. ஒருவேளை அத்தகைய உரிமை சட்டரீதியில் இதுவரை இல்லாவிட்டால் அதை தமிழக அரசு உடனடியாக உருவாக்கவேண்டும்.


இறுதியாக தமிழர் அல்ல; தமிழ்நாட்டவர். குறிப்பாக தமிழ்நாட்டில் வாழும் தமிழ் படித்த தமிழ்நாட்டவர் என்பதே சரி. ஒன்றுக்கு இரண்டுமுறை தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்வுசெய்யப்பட்ட எஸ் டி. உக்கம்சந்த் சேட் தமிழ்நாட்டவர் தான். அவர் வாரிசுகளும் தமிழ்நாட்டவர் தான்.
இர.இரா. தமிழ்க்கனல் இந்திய, தமிழ்நாட்டு அரசுகளின் இன ஒதுக்கலையும் கூலிக்காக அடைக்கலம் தேடிவரும் எளிய மக்களையும் ஒரேதட்டில் வைத்துப்பார்ப்பது தவறானது. இதேசமயம், தமிழ்நாட்டின் மக்கள்பரம்பலை மாற்றியமைக்கும்வகையில் தனியார் வேலைகளிலும் அயலவரின் வருகை, மற்ற மாநிலங்களைவிட அதிகமாக இருப்பதும் ஆய்வுக்கு உரியது. கேரளத்திலும் இப்படியான இடம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் ஆகி, அரசுத் தரப்பிலும் கொள்கைவகுப்பாளர்கள் மட்டத்திலும் வாதங்கள் நடந்து, உரிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன...

 LR Jagadheesan : தமிழ்நாட்டின் பிரச்சனைகளையும் தீர்க்கப்போராடுவதே சரி. இனியும் இதை கண்டும் காணாது கடந்து செல்ல முடியாத இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்..

 Prabhu Rajadurai  :எந்த ஒரு மத்திய அல்லது மாநில அரசு பணியிலும், குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்தாம் விண்ணப்பிக்க இயலும் என்றோ அல்லது குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை என்றோ கூறுதல் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. தமிழக காவல்துறையின் கான்ஸ்டபிள் வேலைக்கு ஒரிசாவில் இருப்பவர் கூட விண்ணப்பிப்பது இயலும். ஆனால் தமிழக அரசு பதவிகளில் தகுதியாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்று இருக்கும். இப்படியாகத்தான் வேற்று மாநிலத்தவர் தடுக்கப்படுகின்றனர். மத்திய அரசு பணிகளைப் பொறுத்தவரை இந்த தகுதி இல்லை. எனவே பிரச்னை ஏற்ப்படுகிறது....

 LR Jagadheesan :  விளக்கத்துக்கு நன்றி. அரசியல் சட்டம் காலத்துக்கேற்பவும் நவீன வாழ்வியல் தேவைகள் மாறும் மதிப்பீடுகளுக்கேற்பவும் தொடர்ந்து திருத்தப்படுவதைப்போல இந்த விதிகளிலும் மறுபரிசீலனை தேவை என கோரலாம் தானே? அதுவும் மத்திய ஆட்சி இப்படி தொட்டம்போட்டு ஒரு வன்மத்துடன் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தமிழ்நாட்டை தன் வேட்டைக்காடாக்கும்போது தமிழ்நாடும் அதன் மக்களும் தம் உரிமைகளுக்கான கூடுதல் பாதுகாப்பை கோருவதில் என்ன தவறிருக்க முடியும்? இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை இந்தி தேசிய மொழியாக திணிக்கப்படாது என்று நேரு கொடுத்த வாக்குறுதியைப்போல தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளை பாதுகாக்க நாம் பாதுகாப்பு கோரலாம் தானே?..

 Prabhu Rajadurai :  சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் விளைவது. சமீபத்தில் போஸ்ட் மேன் வேலைக்கு தமிழ் தகுதி தேவை. ஆனால் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தமிழில் முதல் மதிப்பெண்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நம்மவர்கள் ஒருவர் கூட இல்லை. இது தேர்வு முறையின் குறைபாடு. அது போல ரயில்வே துறை தேர்வு நடைமுறையை சாதகமாகப் பயன்படுத்தில் கடைநிலை ஊழியர்கள் பெருவாரியாக பீகார் ஒரிஸ்ஸா மாநிலத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முறைகேட்டால் விளைவது..

 LR Jagadheesan :  இவை இரண்டுமே அதிகாரிகள் நினைத்தாலே போதும் மீண்டும் மீண்டும் மிக எளிதாக முறைகேடு செய்யமுடியும் என்கிற விபரீதத்தை விளங்கச்செய்யும்போது இதை தடுக்க உரிய சட்டபாதுகாப்பை உருவாக்கியே தீரவேண்டிய கட்டத்துக்கு நாம் வந்திருக்கிறோம் என்பதாகத்தானே நாம்  எடுத்துக்கொள்ள முடியும்?..

Prabhu Rajadurai : தபால் துறையோ, ரயில்வே துறையோ நியமிக்கபட்ட வட நாட்டவர்களில் யாரும் மஹாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியானா, தில்லி, வங்காளம், உத்தர்காண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதில் இருக்கிறது இதற்குப் பதில். முன்பு மும்பையை தேர்வு மையமாக தேர்ந்தெடுத்து தேர்வில் கலந்து கொண்ட பீகார் மாநிலத்தவகளை தேர்வு எழுத விடாமல் ராஜ் தாக்கரே அடித்து விரட்டினார். இப்போது ஆன் லைன் தேர்வு முறை. இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் தமிழகத்தை தேர்ந்தெடுத்து தேர்வு எழுத முடியும். பல கட்டங்களில் தேர்வு நடத்துவதால் பின்னர் அதிக மதிப்பெண் எடுத்த குரூப்பிலுள்ளவர்களின் மதிப்பெண்களை குறைக்கிறார்கள். இதை ஸ்டாண்டர்டைசேசன் என்கிறார்கள். பீகார் ஒரிஸ்ஸா மாநிலத்தவர்கள் ஒரே குரூப்பில் எழுதுகிறார்கள். மொத்தமாக அவர்கள் குறைவாக எடுத்தால், அவர்களின் மதிப்பெண்கள் பின்னர் கூட்டப்படுகிறது  அதனால் அவர்கள் மட்டுமே வருகிறார்கள் என்கிறார்கள்..

LR .Jagadheesan  :  ஆக இது தீர்க்கப்பட்டே ஆகவேண்டிய சமகால வேலைவாய்ப்பு பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. தீர்வைக்கோருவோம்...

 Prabhu Rajadurai இப்போது பிரச்னைக்குள்ளாகியிருப்பது கடைநிலைப் பணிகள். பயணிகள் மற்றவர்களின் பாதுகாப்பு கருதி இவர்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது அவசியம். எனவே தென்னக ரயில்வே பணிகளைப் பொறுத்து தமிழ் அல்லது மலையாளம் தெரிந்திருப்பது அவசியம் என்ற தகுதி சேர்க்கப்படலாம். போஸ்ட் மேன் பிரச்னை வேறு அது மோசடி... இர.இரா. தமிழ்க்கனல் இந்திய, தமிழ்நாட்டு அரசுகளின் இன ஒதுக்கலையும் கூலிக்காக அடைக்கலம் தேடிவரும் எளிய மக்களையும் ஒரேதட்டில் வைத்துப்பார்ப்பது தவறானது. இதேசமயம், தமிழ்நாட்டின் மக்கள்பரம்பலை மாற்றியமைக்கும்வகையில் தனியார் வேலைகளிலும் அயலவரின் வருகை, மற்ற மாநிலங்களைவிட அதிகமாக இருப்பதும் ஆய்வுக்கு உரியது. கேரளத்திலும் இப்படியான இடம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் ஆகி, அரசுத் தரப்பிலும் கொள்கைவகுப்பாளர்கள் மட்டத்திலும் வாதங்கள் நடந்து, உரிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன...

 LR Jagadheesan  : தமிழ்நாட்டின் பிரச்சனைகளையும் தீர்க்கப்போராடுவதே சரி. இனியும் இதை கண்டும் காணாது கடந்து செல்ல முடியாத இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்...

AD Bala மிகச் சரி. தமிழ்நாடு தமிழருக்கே என்ற பெரியாரின் வாதத்தை எடுத்துக்கொண்டு பெரியாரையே நிராகரிக்கிறது இனவெறி. உலகில் எந்த தேசிய இனமும் தூய குருதியால் வரையறை செய்யப்பட்டதில்லை. வரையறை செய்யப்படவும் முடியாது. தேசிய இன உருவாக்கமும், தேசியமாக அதன் பரிணாமும் தேவையென்று கருதுகிறவர்கள் அதனை இனவாதச் சிக்கலில் தள்ளமாட்டார்கள். அப்படித் தள்ளுகிறவர்கள்தான் முகிழ்க்கின்ற தேசிய இனத்தின் பகைவர்கள் - உட்பகைவர்கள். பிற மொழியைத் தாய் மொழியாகக் கொண்டோர் அதன் பகைவர்கள் அல்லர். உலகில் வேறு இடங்களில் அப்படி தாய் மொழி அடிப்படையிலான முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், தாய்மொழி, மத பேதங்களைக் கடந்து தம்மை தமிழ்த் தேசியத்தின் அங்கமாக இந்த மண்ணில் உள்ள மக்களை அடையாளப்பட வைத்தது, அதன் வழி தமிழ் தேசிய இன உருவாக்கத்துக்கு பங்களிப்பு செய்தது திராவிட இயக்கமே. அதை பின்னோக்கி நகர்த்தி இனமோதல் என்னும் சிக்கலில் அதை சிக்கவைக்க முயல்வோரே தங்களுக்கு தமிழ் தேசியர்கள் என்ற பெயரை சூடிக்கொண்டிருப்பது முரண்.....



Article 16 in The Constitution Of India 1949
16. Equality of opportunity in matters of public employment
(1) There shall be equality of opportunity for all citizens in matters relating to employment or appointment to any office under the State
(2) No citizen shall, on grounds only of religion, race, caste, sex, descent, place of birth, residence or any of them, be ineligible for, or discriminated against in respect or, any employment or office under the State
(3) Nothing in this article shall prevent Parliament from making any law prescribing, in regard to a class or classes of employment or appointment to an office under the Government of, or any local or other authority within, a State or Union territory, any requirement as to residence within that State or Union territory prior to such employment or appointment
(4) Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favor of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State
(5) Nothing in this article shall affect the operation of any law which provides that the incumbent of an office in connection with the affairs of any religious or denominational institution or any member of the governing body thereof shall be a person professing a particular religion or belonging to a particular denomination

கருத்துகள் இல்லை: