செவ்வாய், 30 ஏப்ரல், 2019

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - சட்ட பேரவை செயலாளரிடம் திமுக மனு

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - சட்ட பேரவை செயலாளரிடம் திமுக மனுமாலைமலர் : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. lசென்னை: அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.


இதன் அடிப்படையில் 3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்க சபாநாயகர் தனபால் முடிவு செய்தார். கொறடா ராஜேந்திரன் அளித்துள்ள புகார் குறித்து விளக்கம் கேட்டு தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு அளித்தார்.< ஏற்கனவே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்தால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: