வியாழன், 2 மே, 2019

இலங்கையிலிருந்து சவுதி பிரஜைகளை வெளியேறுமாறு ஆலோசனை.. 106 பேர் கைது .. Saudi Has Sri Lankan Blood on Its Hands: Document

thinakaran.lk : இலங்கையில் தங்கியுள்ள தனது நாட்டுப் பிரஜைகளை  இலங்கையிலிருந்து வெளியேறுமாறு, சவுதி அரேபிய தூதரகம்  ஆலோசனை வழங்கியுள்ளதாக, சவுதி அரேபிய தொலைக்காட்சி சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள சவுதி தூதரகமானது, ட்விட்டர் மூலம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாகவும் அத்தொலைக்காட்சிச் சேவை செய்தி வெளியிட்டுள்ளதுதற்போது இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தனது நாட்டு பிரஜைகளுக்கு குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக சவுதி அரேபியத் தூதரகம் தெரிவித்தது.
உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில், 42 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட சுமார் 250 பேர் உயிரிழந்ததுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

தினத்தந்தி  ;  இலங்கை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் வெளிநாட்டவர்கள் மற்றும் சிறார்கள் உட்பட 253 பேர் கொல்லப்பட்டதுடன் 500-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த  தாக்குதல் தொடர்பாக  தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறித்த தாக்குதலின் முக்கிய மூளையாக செயல்பட்ட  ஜஹ்ரான் ஹாஷிமின் மாமனார் வாக்குமூலம் அளித்துள்ளார்.< முகம்மது ஹுசைன் அப்துல் காதர் என்பவரின் மகளையே ஜஹ்ரான் ஹாஷிம் திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்துல் காதரின் குடியிருப்புக்கு தமது உறவினருடன் அடிக்கடி சென்று வந்துள்ளார் ஹாஷிம். ஒருகட்டத்தில் அப்துல் காதரை தனியாக சந்தித்து பேசிய ஹாஷிம், தாம் ஒரு மசூதியில் கல்வி பயின்று வருவதாகவும், அவரது மகளை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹாஷிம் திருமண கோரிக்கையை முன்வைக்கும்போது அப்துல் காதரின் மகளான பாத்திமா ஷாதியாவுக்கு 15 வயது என கூறப்படுகிறது. ஹாஷிமின் குடும்பம் தமக்கு முன்னரே தெரியும் என்பதால் தமது மகளை அவர் திருமணம் செய்வதில் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை என அப்துல் காதர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.<
ஏப்ரல் 28 ஆம் தேதி, சாய்ந்தமருதுவில் உள்ள ஹாஷிமின் குடியிருப்புக்குள் புகுந்த போலீசாரிடம் சிக்காமல் இருக்க, அவரது தந்தையும் இரு சகோதரர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், போலீசாரின் தாக்குதலிலே அவர்கள் கொல்லப்பட்டனர் என இருவேறு கருத்துக்கள் வெளியாகின. இந்த நிலையில் அப்துல் காதரின் துணையுடனே, பாத்திமாவையும் அவரது மகளையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இருவரும் காயங்களுடன் போலீசாரால் மீட்கப்பட்டனர். இலங்கை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளன
english.almanar.com.lb/727410 :
More than 250 people were killed in a series of terrorist attacks which targeted churches and hotels in Sri Lanka on April 21.

Saudi Arabia confesses responsibility or at least ‘relation’ to the terrorist attacks that hit Sri Lanka two weeks ago as Christians celebrated Easter, according to a leaked document.
The leaked ‘urgent, confidential and top secret’ document obtained by Lebanese Al-Ahed news website, shows a letter sent by Saudi Foreign Minister Ibrahim bin Abdul Aziz al-Assaf’s to Saudi Ambassador to Sri Lanka, Abdul Nasser al-Harethi.
In the letter, the Saudi minister ordered the ambassador to carry out several measures.
“First: You should delete all documents, computer data and latest correspondence with domestic and foreign members and groups, in addition to imposing a curfew for the embassy personnel unless it is necessary,” the letter read.
“Second:  You should inform all those related to the Kingdom of Saudi Arabia including counselors, security forces and intelligence during the three coming days, especially on the Christian Easter Day, to avoid presence in public and crowded places namely churches,” according to the letter.
“Third: You should send written news about the Sri Lankan authorities and their viewpoints regularly to this ministry,” the letter, signed by al-Assaf added.
More than 250 people were killed in a series of terrorist attacks which targeted churches and hotels in Sri Lanka on April 21.

கருத்துகள் இல்லை: