tamil.oneindia.com - shyamsundar :
திருவனந்தபுரம்:
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்த
இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் வரிசையாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இலங்கை மட்டுமில்லாமல் தெற்காசியாவிலேயே நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். அங்கு அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. 450க்கும் அதிகமானோர் இதில் காயம் அடைந்தனர். இதில் இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன் இலங்கை ஆளும் கட்சியை சேர்ந்த இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியூதின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் அளித்த தகவலின் பெயரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த 2 பேரிடம் சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்துகிறார்கள். இவர்களுக்கு இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன் இலங்கை சென்று வந்ததாக கூறபடுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக