ஆணையம் மத்திய, மாநில அரசுகளின் கைப்பாவையாக செயல்பட்டு வருதாக குற்றம்சாட்டிய எம்எல்ஏ கருணாஸ், இடைத் தேர்தலுக்கும் பின்னர் அதிமுக அரசு மீது நம்கிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அப்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த நடிகர் கருணாஸ் திருவாடானைத் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைந்த பிறகு கருணாஸ் தினகரன் ஆதரவாளராகவே செயல்பட்டு வருகிறார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கைகைளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தினகரன் ஆதரவாளர்களாக செயல்பட்டு வரும் பிரபு, கலைச் செல்வன், ரத்தின சபாபதி ஆகியோரை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் சபாநாயகர் தனபால் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் எம்எல்ஏ, சபாநாயகரின் இந்த நடவடிக்கை , தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே தற்போது உள்ள அ.தி.மு.க. அரசின் ஐயப்பாட்டை காட்டுகிறது என தெரிவித்தார்.
3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளது அரசியல் காரணம் தான் என்றும், . அந்த 3 எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து எனக்கு ஏன் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே நேரத்தில்எ எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தால் நான் என்ன செய்வேன் என்று அவர்களுக்கே தெரியும். அதனால் தான் அவர்கள் எனக்கு அனுப்பவில்லை என்றும் கருணாஸ் கிண்டலாக தெரிவித்தார்.
வரக்கூடிய தேர்தலில் அ.தி.மு.க. வாக்கு வங்கி சரிவை சந்திக்கும் என்றால், அவர்கள் வைத்து உள்ள பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகியவற்றுடன் ஏற்பட்ட கூட்டணியே காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ள கருணாஸ், . சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவு வெளியான பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அப்போது உள்ள சூழலுக்கு ஏற்ப நான் முடிவெடுப்பேன் என்று அதிரடியாக தெரிவித்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மக்களுக்கான திட்டம் நிறைவேற்றும் கட்சிக்கு என்னுடைய ஆதரவை தெரிவிப்பேன் என்றும், தொகுதிகளுக்கு யார் நல்லது செய்தாலும் அவர்களுக்கும் எனது ஆதரவு உண்டு என்றும் கருணாஸ் குறிப்பிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக