சனி, 4 மே, 2019

இஸ்லாமிய தீவிரவாதிகள் குர்ரானில் இருந்தே கொலைகளுக்கான நியாயத்தைக் கற்பிக்கிறார்கள்?

 This guy is a failed Taliban suicide bomber with a hilarious story. When he was apprehended, authorities discovered a titanium blast shield covering his genitals. When asked about this, he explained that he wanted to keep the family jewels safe for the 72 virgins waiting for him in paradise.
A story like this is almost too good to be true, from a comedic perspective, so I did a search on a few Arabic news sites using Google to translate for me. Seems legit.
It’s truly amazing the sort of crazy shit religion can make you believe. scarface200ngblog.wordpress.com

Kishokar stanislas முகநூலில் எழுதியிருக்கும் காத்திரமான பதிவு...
சில வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதி ஒருவனை அமேரிக்க கூட்டுப் படைகள் கைது செய்கின்றன. அவன் ஒரு தற்கொலை தீவிரவாதி. அவன் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறவன். அவன் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத இயக்கம் ஒன்றைச் சேர்ந்தவன். தற்கொலைக் குண்டுகளை உடம்பில் கட்டியிருக்கும் அவனது ஆணுறுப்பை இரும்பாலான கவசத்தால் மறைத்திருக்கிறான். காரணம் கேட்டதற்கு "குர்ரானில் சொல்லப்பட்டிருக்கிறபடி தற்கொலை செய்து ஜிஹாதியாக மரணிக்கப்போகிற தனக்கு சொர்க்கத்தில் அல்லாவால் அருளப்படவிருக்குற எழுபத்தியிரண்டு கன்னிப் பெண்களையும் புணருவதற்காக தனது ஆண்குறியைப் பாதுகாப்பதற்காக அப்படிச் செய்தேன்" என்றிருக்கிறான்.

அபத்தமான இந்தச் சிந்தனை , விசாரணைகள் இன்றி ஒரு மதநூலை நம்புவதால் வந்தது. உண்மையில் முஸ்லிம்கள் அத்தனை பேருமே குர்ரானை கேட்டுக் கேள்வியில்லாமல் விசுவசிப்பவர்கள். அதன்படியே ஒழுகுகிறவர்கள். அவர்களது மார்க்க கட்டமைப்பு அப்படித்தான் இருக்கிறது.
இப்படியாக விசாரணைகள் இன்றி குர்ரானை விசுவசிக்கிற ஆட்களில் இருந்து தான் குர்ரான் கேட்டுக்கொள்கிற கொலைகளுக்காக மனிதகுல விரோத சிந்தனைகளுடன் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் தோன்றுகின்றன, தொழிற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்கள் நியாயப்படுத்தும் அத்தனை கொலைகளையும் குர்ரான் சொல்கிறது. குர்ரானில் விதிக்கப்பட்டுள்ளபடியே அவர்கள் கொலைகளைச் செய்கிறார்கள். குர்ரானில் இருந்தே ஆதாரங்களை காட்டி அந்தக் கொலைகளை நியாயப்படுத்துகிறார்கள்.

ஆனால் இல்லை. இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் . கொலைககளை குர்ரான் ஆதரிக்கவில்லை என்று , குர்ரானை அமைதிவழியில் interpret செய்யும் முஸ்லிம்களால் , எப்போதுமே இஸ்லாமிய அடிப்படை வாதிகளை வெற்றிகொள்ள முடிவதில்ல. காரணம் அடிப்படைவாதிகள் குர்ரானில் இருந்தே ஆதரங்களைக் காட்டுகிறார்கள். அவர்கள் செய்யும் அத்தனை கொலைகளையும் குர்ரான் நியாயப்படுத்துகிறது. அதற்கான வசனங்களை தனக்குள் வைத்திருக்கிறது.
10 மணிநேரம் நடந்த வாதத்தில் , எகிப்திய பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்க்கிற , அமைதி வழி தான் இஸ்லாம் என்று நம்புகிற ஒரு இஸ்லாமிய பேராசிரியரை தீவிரவாதியான குர்ரானைத் தவிர வேறேதும் படித்திராத சர்ஹானால் தோற்கடிக்க முடிந்திருக்கிறதென்றால் அதற்கு குர்ரானே காரணம். அந்தப் பேராசிரியரால் சர்ஹானை வெற்றிகொள்ள முடியாமைக்கு காரணம் , அவர்கள் இருவருமே கண்மூடித்தனமாய் விசுவசிக்கும் குர்ரானில் இருந்தே சர்ஹான் ஆதாரங்களைக் காட்டினான்.
முஸ்லிம்கள் அத்தனை பேருமே தீவிரவாதிகள் கிடையாது. ஆனால் குர்ரானில் சொல்லப்பட்டிருக்கும் மனிதவிரோத சிந்தனைகளோடு எழும் தீவிரவாதிகளின் தேர்ந்த பேச்சாற்றல் கொண்ட ஒருவனால் அத்தனை முஸ்லிம்களையும் தன் செய்களை நியாயப்படுத்தி தன் பக்கம் இழுக்க முடியும் . காரணம் அத்தனை பேருமே குர்ரானை கேள்விகள் இல்லாமல் ஏற்றுக்கொள்பவர்கள்.
இலங்கை தொடர்குண்டுவெடிப்பு நடந்த அடுத்த நாள் நான் ஊருக்குப் போயிருந்தேன். பக்கத்து ஊருக்கு போவதற்காய் முச்சக்கரவண்டி தேவைப் பட்டபோது முச்சக்கரவண்டி ஓட்டுகிற எனது இஸ்லாமிய நண்பன் ஒருவனைத்தான் கூப்பிட்டேன். ஒரு குழுவினர் செய்த குற்றத்திற்காய் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க பெரும்பான்மையானோர் பகீரதப் பிராயத்தனம் செய்துகொண்டிருந்த நேரத்திலும் நான் அவனை நம்பினேன். காரணம் அவன் என் நண்பன். அவனை எனக்கு தெரியும். அவன் தீவிரவாதி கிடையாது.
நாட்டு நடப்புகளைப் பேசிக்கொண்டிருந்த ஒரு கட்டத்தில் அவன் சொன்னது எனக்கு அதிர்ச்சியாயிருந்தது.
" மச்சான்... ஒருத்தன் ரெண்டு பேர் செய்யிற வேலைகளுக்கு இவனுக எல்லாரையும் தீவிரவாதியா பாத்தா உண்மையிலயே இவனுகள திருப்பி அடிக்க குர்ரான்ல இடமிருக்கு ".
இங்கே தற்காப்பு தாக்குதல் என்பது ஒரு பக்கம் இருக்க , தன்னை கேள்விகள் இன்றி விசுவசிக்கும் ஒருவனை இலகுவில் வன்முறையை நோக்கி இழுத்துவிடுகிற , அந்த வன்முறையை நியாயப்படுத்துகிற ஹதீசுகளை தன்னகத்தே வைத்திருக்கிறது குர்ரான். வன்முறையை அதிலிருக்கும் வசனங்களால் நியாயப்படுத்த இயலும்.
இங்கே குர்ரான் எழுதப்பட்ட காலம் முக்கியமானது. ஆட்சிக்காக போர் செய்வதும் , கொள்ளையடிப்பதும் தேவைப்பாடாய் இருந்த காலகட்டத்தில் வரைமுறையற்ற வன்முறைகளை ஓரளவேனும் நெறிகளுக்குள் கொண்டுவரும் நோக்கில் தான் குர்ரான் எழுதப்படுகிறது. அத்தோடு அன்றைய நாளில் நாடுகளைக் கைப்பற்றவும் , மறையைப் பரப்பவும் ஒரே வழியாய் இருந்த யுத்தத்துக்கானதும் , கொலைகளுக்கானதும் நியாயப்பாடுகளை தன்னகத்தே உள்வாங்குகிறது.
ஆனால் காலப்போக்கில் நாடுகள் ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து ஒவ்வொரு நாடுகளும் அத்தனை குடிமகன்களுக்கும் ஒரே சட்டம் என்ற கொள்கைகளுக்குள் வந்த பிறகு குர்ரான் பேசுகிற அனேக விசயங்கள் மனிதகுலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களாய் துருத்த ஆரம்பிக்கின்றன.
குர்ரானில் இருக்கும் வன்முறையை ஒத்த விசயங்களை பைபிளின் பழையை ஏற்பாட்டில் தாராளமாய்க் காணலாம். உண்மையில் குர்ரானும் , பைபிளின் பழைய ஏற்பாடும் கிட்டத்த ஒன்று போல இருக்கும். ஆனால் கிறிஸ்தவர்கள் முற்றுமுழுதாய் யேசுவையும் , அவரின் போதனைகளையும் பின்பற்றுகிறவர்கள். பைபிளில் யேசுவின் வருகையோடு பழைய ஏற்பாட்டின் அத்தனை விதிகளும் அடித்து நொறுக்கப்படுகிறது. அன்பு மட்டுமே உலகை ரட்சிக்கும். அன்பு செய்யவே நான் உலகுக்கு வந்தேன். அன்பே மீட்பு. வன்முறை எப்போதும் பாவம் என்ற தீர்க்கமான கொள்கைகளை யேசு விதைத்துவிட , யேசுவின் முன்னோர்களின் வாழ்வியல் மரபாய் இருந்த பழைய ஏற்பாட்டின் விதிகள் அனைத்தும் வெறும் எழுத்துக்களோடு நின்றுவிடுகிறது. என்னதான் பழைய ஏற்பாட்டில் கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்று வன்முறை போதிக்கப்பட்டிருந்தாலும் எந்த கிறிஸ்தவனாலும் வன்முறைக்கு ஆதரவாய் அந்த வரிகளைச் சொல்லி தன் பழிவாங்கலை நியாயப்படுத்த முடியாமல் இருக்கக் காரணமும் அதுவே தான். பழைய நியமங்களின் காலம் முடிந்துவிட்டது என்று யேசு அந்த விதிகளை அடித்து நொருக்குகிறார்.
அது தவிரவும் பைபிளை அணுகும் முறையை காலத்துக்கு காலம் பாப்பரசர் தலைமையில் கூடிய திருச்சபை முதலாம் இரண்டாம் வத்திக்கான் சங்க அமர்வுகளின் மூலம் கால மாற்றத்துக்கு ஏற்ப சரிசெய்துகொள்கிறது. எந்தக் கணத்திலும் சமூகத்துக்கு ஒவ்வாத ஒரு நூலாய் பைபிள் இருந்துவிடக் கூடாது என்பதில் திருச்சபை கவனமாய் இருந்து வந்திருக்கிறது.
ஒரு காலத்தில் இந்து சமயத்தின் புனித நூலாய் பார்க்கப்பட்ட மனுசாஸ்திரம் , காலப்போக்கில் மனித குல விரோதி என்று புறந்தள்ளப்பட்டதும் கால மாற்றத்திற்கு ஏற்ப இந்து சமயம் தன்னை தகவமைத்துக் கொண்டமையால் தான்.
இதே மாற்றம் நிச்சயம் குர்ரானில் நிகழ்த்தப்பட வேண்டும். குர்ரான் எந்தக் காலத்தில் எழுதப்பட்டதோ அந்தக் காலத்தில் குர்ரானுக்கான தேவையிருந்தது. அதன் ஹதீசுகளுக்கு வேலையிருந்தது. ஆனால் இப்போது நபிகள் நாயகம் குர்ரானை எழுதிய போது இருந்த காலம் கிடையாது.
தனிமனித , ஆண் , பெண்களுக்குரிய , மதங்களுக்கு உரிய , சமூகம் சார்ந்த சட்டங்களை ஒவ்வொரு ஜனநாயக அரசும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இந்த சனநாயக உலகத்தில் outdated ஆக இருக்கும் குர்ரானின் வசனங்களும் ஹதீசுகளும் மனிதகுல விரோதமாய் தெரிவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
குர்ரானில் அற்புதமான கருத்துக்கள் ஏராளம் உள்ளன , அதே போல மனிதகுல விரோதப்போக்கை ஊக்குவிக்கின்ற வசனங்களும் இருக்கின்றன. இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று interpretation குடுக்கிற எவராலும் சர்ஹான் போன்ற தீவிரவாதிகளை வாதாடி வென்றுவிட இயலாது. காரணம் இருவருமே கண்மூடித்தனமாக குர்ரானை விசுவசிக்கிறவர்கள். சர்ஹானின் கொள்கைகளும் குர்ரானிலேயே இருக்கிறது.
வன்முறையைச் சொல்லிகொடுக்கிற , இந்த காலத்துக்கும் சக மனிதனுக்கும் ஒவ்வாத கடைசி வசனம் குர்ரானிலிருந்து நீக்கப்படும் வரை இஸ்லாமின் பெயரால் நிகழும் எந்த தீவிரவாதமும் ஓயப்போவதும் இல்லை. காரணம் ஒவ்வொரு முஸ்லிமும் குர்ரானை வேறெந்தக் கேள்விகளும் இன்றி விசுவசிப்பவர்கள்.
எந்தக் காரியங்களை உனக்கும் , உன் குடும்பத்திற்கும் செய்தால் வலிக்குமோ , துன்பமாய் இருக்குமோ அந்தக் காரியங்களை சுய லாபத்துக்காய் சக மனிதனுக்குச் செய் என்று உன் மதம் உன்னை கேட்டுக்கொள்ளுமானால் நிச்சயமாய் உன் மதம் தான் தீவிரவாதத்துக்கான முதல் விதை. அந்த மதம் சொல்லும் புனித நூல்கள் அத்தனையும் மனித குல விரோதிகள்.
குர்ரான் தான் தீவிரவாதத்தை வளர்க்கிறதா? என்று கேள்வி கேட்பீர்களேயானால் என் பதில் இல்லை என்பதாய் தான் இருக்கும். ஆனால் அத்தனை இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளும் குர்ரானில் இருந்தே தங்கள் கொலைகளுக்கான நியாயத்தைக் கற்பிக்கிறார்கள். So Qur'an need an Edit ASAP.

கருத்துகள் இல்லை: