tamil.news18.com :புயல் கரையை கடந்த பின் கடலோர
மாவட்டங்களில் வெப்பம் குறையும் என்றும் உள்மாவட்டங்களில் அதிகமாகும்
என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில்
நிலைகொண்டுள்ள ஃபோனி புயல், உச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளதாகவும்,
ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி பகுதியில் நாளை மறுதினம் கரையை கடக்கும்
என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்,
சென்னைக்கு வடகிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவில் ஃபோனி புயல் மையம்
கொண்டிருப்பதாக கூறினார்.
புயல்
காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்
காற்று வீசும் எனக் கூறிய அவர், நாளை மறுதினம் வரை மத்திய மேற்கு வங்க கடல்
பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
புயல் கரையை கடந்த பின் கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறையும் என்றும் உள்மாவட்டங்களில் அதிகமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாளை மறுநாள் பிற்பகலில் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் சாந்த்பலி இடையே ஃபோனி புயல் கரையைக் கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 205 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
புயல் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என்றும் ஒடிசாவின் கஞ்ஜம், கஜபதி, குர்தா, பூரி மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் சேதம் ஏற்படக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஒடிசாவின் 17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் 11 மாவட்டங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகளை விலக்கிக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக