சனி, 4 மே, 2019

2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!'.. .. பொதுத்துறை நிறுவனங்களில் 10 வீதம் தமிழர்களுக்கு .. 90 வீதம் வடமாநிலத்தவர்க்ககே !

`2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்vikatan.com - bhuvaneswari-k : திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 1,765 பேர் பயிற்சிக்கு அழைக்கப்பட்டதில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 300 பேரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால், தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு  செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்"
தெற்கு ரயில்வே - மத்திய அரசுத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ரயில்வே  துறையில் தமிழர்கள் முற்றிலுமாகப்
புறக்கணிக்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. அதில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 1,765 பேர் பயிற்சிக்கு அழைக்கப்பட்டதில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 300 பேரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால், தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக ரயில்வே துறையில் 2,600 பணியிடங்களில் 2,300 பேர் வட மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதேபோன்று தபால் துறையிலும் தமிழர்களைத் தவிர்த்துவிட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மாநிலத்தில் உள்ள 18 பொதுத்துறை நிறுவனங்களில் இங்குள்ளவர்களுக்கு 10 சதவிகிதம் பணியும், அதேநேரத்தில் வட மாநிலத்தவர்களுக்கு 90 சதவிகித பணியும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து இன்று பொன்மலையில் தமிழ்த் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், ``வட மாநில இளைஞர்களை, தமிழகத்தில் கோவை, திருச்சி பொன்மலை, சென்னை பெரம்பூர் ஆகிய மூன்று ரயில்வே பணிமனைகளில் பணியமர்த்தி வருகிறது, ரயில்வே துறை. இதில் பொன்மலையில் 325 பேரை பணிக்கு எடுத்துள்ளது. அதில் ஒருவர்கூடத் தமிழர்கள் இல்லையென்பது மிகவும் வேதனையான நிலை. இந்தத் துறை மட்டுமல்ல... வருமானவரித் துறை, பி.ஹெச்.எல் உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கும் அனைத்துத் துறைகளிலும் கடந்த  ஐந்தாண்டுகளுக்கு மேல் தமிழர்களைப் புறக்கணிக்கும் நிலை இருந்துவருகிறது.
மணியரசன் தமிழ்தேசிய பேரியக்கம்
அதற்குக் காரணம், தமிழர்களைப் பகையினமாக இந்த ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்களுடைய சம்ஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளைத் திணிக்க இப்படியான செயல்களில் இறங்கியுள்ளது பி.ஜே.பி. அரசு. மேலும் வடநாட்டு வரலாறுகளைத் தவிர, தமிழர்களின் வரலாறுகள் நிலைத்துவிடக் கூடாது என்றும் இந்த அரசாங்கம் கருதுகிறது. தமிழர்களைத் தவிர மற்ற இனத்தவர்கள் ஆரியத்தோடு இணைந்துபோகிற ஒன்றாக இருப்பதன் விளைவாகவும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. மொழி, மதம், இனம் போன்றவற்றுக்குத் தமிழர்கள் போட்டியாக இருக்கிறார்கள். அதனால், அந்த இனத்தை அழிக்க மேற்கொள்ளப்பட்ட சதியின் வெளிப்பாடுதான் மத்திய அரசின் இந்த நடவடிக்கை. மேலும், `இன ஒதுக்கல் குழு' நடவடிக்கையாகவும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் போக்கைத் தடுக்கவே போராட்டம் நடத்தியுள்ளோம். தாய்மண்ணில் உள்ளவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்தபின்னரே பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களைப் பணிக்கு அமர்த்தவேண்டும். ஆனால் இங்குத் தமிழர்களை தவிர, மற்றவர்கள்தான் ஆதிக்கம் செய்கிறார்கள்.
பிற மாநிலங்கள் 1986-ம் ஆண்டே சட்டம் கொண்டுவந்துள்ளன. அந்தச் சட்டத்தின்படி மத்திய அரசுப் பணியாக இருந்தாலும், மாநில அரசுப் பணியாக இருந்தாலும், சொந்த மாநிலத்தில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தபின்னரே பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களைப் பணியமர்த்த வேண்டும் என்று அந்தச் சட்டம் சொல்கிறது. அதே போன்றதொரு சட்டத்தைத் தமிழகத்திலும் கொண்டுவரவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கமாக உள்ளது" என்றார்

அன்சாரி முஹம்மது : இது சாதாரணமாக கடந்து போகக்கூடிய செய்தி அல்ல. இது காவி பயங்கரவாத RSS இன் நீண்டகால திட்டங்களில் ஒன்றுதான். அவர்களை இன்றுவரை அண்டவிடாத தமிழகத்தில் வடமாநிலத்தவனை அதிக அளவில் குடியேற்றி சிறுக சிறுக நமது தாய் மொழி, நமது கலாச்சாரம், உணவு, உடை அனைத்தையும் மாற்றும் சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் இப்போது நடைபெறும் தமிழனின் வேலைவாய்ப்பு பறிப்பு நடவடிக்கை.
இதற்கு மறைமுக ஆதரவளித்து வருபவர்கள் அடிமை எடப்பாடியும், பன்னீர் செல்வமும். இதை தடுக்கும் துணிவும் அவர்களுக்கு கிடையாது. தடுத்தால் ஆட்சியே இருக்காது என்பது அவர்களுக்கு தெரியும். இந்த கேடுகெட்ட அடிமைகளின் ஆட்சியை இனியும் நீடிக்க அனுமதித்தால் வெகு விரைவில் தமிழகம் இன்னொரு குஜராத்தாக, ராஜஸ்தானாக, பீகாராக , உத்தர பிரதேசமாக மாறி நமது அடையாளத்தை இழக்கப்போவது நிச்சயம்.
தமிழகத்தின் பெரிய நகரங்கள் அனைத்தும் மார்வாடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. பிழைக்க வந்தவனிடனிடமே பிச்சை எடுக்கும் அவலநிலையில் இன்றைய தமிழனின் நிலை தாழ்ந்து விட்டது.

கருத்துகள் இல்லை: