மாலைமலர் :முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் பெண்
அதிபராக ஜூஜூனா கபுடோவா 58 சதவீத ஓட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார்.
பிராட்டிஷ்லாவா:
ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுலோவாகியா. அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில்
ஊழலுக்கு எதிரான ஜூஜூனா கபுடோவா என்ற பெண் போட்டியிட்டார். அவரை எதிர்த்து
ஆளும் கட்சி வேட்பாளராக மாரோஸ் செப்கோவிக் நிறுத்தப்பட்டார். இருவருக்கும்
இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த தேர்தல், நன்மைக்கும், தீமைக்குமான போராட்டம் என ஜூஜூனா கபுடோவா
குறிப்பிட்டார். இந்த நிலையில், அதிபர் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணி
முடிக்கப்பட்டன. இதில் ஜூஜூனா கபுடோவா 58 சதவீத ஓட்டுகளை கைப்பற்றி வெற்றி
பெற்றார். ஆளும் கட்சியின் வேட்பாளர் மாரோஸ் செப்கோவிக்கிற்கு 42 சதவீத
ஓட்டுகள் விழுந்தன. சுலோவாகியா நாட்டில் பெண் ஒருவர் அதிபராக தேர்வு
பெற்றிருப்பது இதுவே முதல் முறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக