செவ்வாய், 2 ஏப்ரல், 2019

டாடா, பிர்லா, அம்பானி எல்லாம் போயி ... அதானி அதானி அதானி மோடியின் பெருச்சாளி

Raja M Raja : உங்களால் இதை நடுநிலைமையாக சிந்திக்க முடியுமா..???
ரெண்டு வருசத்துக்கு முன்னால பணக்காரன்னா அம்பானியா டாடாவான்னு கேட்டோம் திடீர்னு இப்ப அதானி அதானின்னு ஒரு ஆளு முன்னுக்கு வந்து முண்டிட்டிருக்காரு காரணம் என்னன்னு தெரியுமா..??
ஒடனே அவரு ஒழைப்பால ஒசந்தவரு அதுல என்ன தப்புன்னு கேக்குறீங்களா..
ஆனா காரணம் அதுவல்ல மோடிதான் காரணம்..
ஆமாம் மோடி மட்டும்தான் காரணம்..
அப்டி என்ன அவரு மோடிக்கி கிழிச்சாருன்னா...
மோடி குஜராத்தில் ஆட்சி அமைத்த மூணே மாசத்தில் 2002 பிப்ரவரி குஜராத் கலவரத்துல முஸ்லீம்கள் மீதான இனஅழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்டது .
அதைத்தொடர்ந்து மோடி என்ன பன்றாருன்னா ஒரு இன்வஸ்ட்மென்ட் மாநாடு நடத்துனாரு அதாவது தனது மாநிலத்துக்கு தொழில் தொடங்க வாங்கன்னு பெரிய பெரிய மொதலாளிகளை கூப்புடறது..
அப்டி கூப்புட்டா ஒடனே வந்துருவாங்களா அதுக்குன்னு CII னு ஒரு அமைப்பு இருக்கு.
அதாவது Confederation Of Indian Industries.
அந்த CII ல இந்தியாவுல உள்ள அத்தனை பெரிய நிறுவனங்களும் உறுப்பினராக இருக்கும்.

அந்த CII என்ன பன்னும்னா ஒரு மீட்டிங்க் அரேஞ்ச் பண்ணி அந்த மாநிலத்துல தொழிற்சாலைகள் அமைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
மோடி அதே போல ஒரு மீட்டிங்க் அரேஞ்ச் பன்னாரு ஆனா அது CII மெம்பர்கள் மோடியின் இனஅழிப்பை சிறுபான்மையினர் மீதான துவேசத்தை அந்த மீட்டிங்க்ல போட்டு கிழிகிழின்னு கிழிச்சானுக..
HDFC பராகா, அஸீம் பிரேம்ஜி, நாராயணமூர்த்தி போன்ற சாப்ட்வேர் கம்பெனி டான்கள் நேரடியாகவே ஜினோஸைட்னு அறிக்கை விட்டார்கள்...
இதனால் அந்த கூட்டம் தோல்வியில் முடிந்தது...
விடுவானுகளா குஜராத்திக..
நீங்க என்னடா அமைப்பு நாங்க இருந்தாதாண்டா நீங்களே அப்டீன்னு நம்ம கௌதம் அதானி தலைமையில் மொத்தமா அந்த அமைப்பை விட்டு வெளியேறினார்கள்..
உடனே RGG ன்னு ஒரு அமைப்பை ஏற்படுத்துனானுக. அதாவது Resurgent Group of Gujarat னு ஒரு அமைப்பை ஏற்படுத்தி அப்ப சென்ட்ரல்ல இருந்த பிஜேபி கவர்மெண்ட் மூலமா CII க்கு கொடைச்சல் கொடுத்தானுக..
CII லிருந்து பெரும்பாலான கம்பெனிகள் விலகியதால் அந்த அமைப்பு தடுமாறியது அதுவுமில்லாமல் சென்ட்ரல் கவர்மெண்ட்டின் அழுத்தத்தால் அதிலிருந்த மற்ற கம்பெனிகளின் ப்ராஜக்ட்டுகளும் ஆட ஆரம்பித்தன.
கடைசியில் CII யை பணிய வைத்து மோடியிடம் மன்னிப்பு கேட்க வைத்தார்கள்.
அந்த சமயத்தில் மோடியை காப்பாற்றிய RGG அமைப்பை உருவாக்கியவர்தான் இந்த அதானி..
அன்று மோடிக்கு சப்போர்ட் செய்த குஜராத்திகளில் முதன்மையானவர்கள்.
அதானி குழுமம்- அதானி.
பேக்கரி என்ஜீனியரிங்க்- அச்சல் பேக்கரி
டோரண்ட் பார்மஸூட்டிக்கல்- மேத்தா
கேடில்லா பார்மசூட்டிக்கல்-இந்திரவர்தன் மோடி.
நிர்மா குருப்-கர்சன் படேல்.
மோடி அதற்கு நன்றிக்கடனா மொதவேலையா சின்னலெவல்ல நிலக்கரி இறக்குமதி பன்னிட்டு இருந்த அதானிக்கு என்ன பன்னாருன்னா குஜராத்ல உள்ள முந்த்ரா துறைமுகத்தையே தாரை வார்த்தாரு..
எவ்வளவுக்குன்னு கேக்குறீங்களா அதிகமில்லை ஜெண்டில்மேன் சதுர அடி 10 காசுக்கு..
அப்புறம் அதானிக்கு கோதாவரி படுகையில கேஸ் எடுக்குறது அனுமதி, என்விராண்ட் மெண்ட் ஸூனுக்கு இடம் குடுக்குறதுன்னு கடைசில ப்ரைம் மினிஸ்டரான உடனேயே ஸ்டேட்பாங்க்ல 6200 கோடி கடன் வாங்கிகுடுத்து ஆஸ்த்ரேலியாவுக்கு மோடியே நேரா போய் நிலக்கரி சுரங்கமும் வாங்கி கொடுக்கற வரைக்கும் அதானிக்கு விசவாசமா இருக்காரு..
அதனால 2004 ல வெறும்400 கோடி மதிப்பிருந்த அதானி க்ரூப்போட இன்றைய மதிப்பு சுமாராக ஒரு லட்சம் கோடி. இந்தியாவோட நாலாவது பணக்காரர்.
அடுத்த டோரண்ட் பார்மாசூட்டிக்கல்ஸ்க்கு இன்னா பன்னாருன்னா ப்ரைம் மினிஸ்டரான மொத வேலையா அந்த கம்பெனியோட குறிப்பிட்ட மருந்துகளை மட்டும் என்ன விலைக்கு வேண்டும்னாலும் வித்துக்கலாம்னு NPPA அதாவது National Pharmaceutical Pricing Authority மூலமா அனுமதி கொடுத்தாரு.
இந்த விசயத்ததான் மனமோகன்சிங் அத்தியாவசிய மருந்துகளுக்கு ப்ரைஸ் கண்ட்ரோல் போட்டு தடைபோட்டு வச்சிருந்தாரு..
அந்த தடைய மோடி தனது நண்பர் டோரண்ட் மேத்தாவுக்காக தொறந்து விட்டாரு..
அதனால் டோரண்ட் பார்மசூட்டிக்ல் இன்று இந்தியாவின் முதல் பத்து இடங்களுக்குள் வந்த 30000 கோடி நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது..
அதே போல பேக்கரி என்ஜீனியரிங்க் கம்பெனிக்காக ரியல் எஸ்டேட் துறைகளில் நிலங்களை தாரை வார்த்து விட்டார்..
அந்த பேக்கரி என்ஜீனியரிங்குடைய இன்ற மதிப்பு சுமாராக 10000 கோடிகள்.
இம்புட்டுத்தானான்னு கேக்காதிங்க அந்த கம்பெனியோட மதிப்பு மோடி ஆட்சிக்கு வரும்போது 2004ல 2கோடி..
அதாவது 2 கோடிலேருந்து 10000 கோடி..
வாயப் பொழக்காதீங்க.. டோர் லாக்..
மக்களின் வளங்களை அள்ளி தனது நண்பர்களின் வளர்ச்சிக்கு உதவிய மோடி மக்களுக்கான விசயஙகள் செய்கிறார் என்பதெல்லாம்..
நாயின் வாயில் ரத்தத்தை பார்த்துவிட்ட பிறகு..
அது ஆட்டும் வாலில் நன்றியை எதிர்பார்க்க முடியாது

கருத்துகள் இல்லை: