வெள்ளி, 5 ஏப்ரல், 2019

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை லைகா வாக்குகிறது?

லைகா - அல்லிராஜா சுபாஸ்கரன்
வீரகேசரி : ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய
நிறுவனமொன்றிற்கு விற்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. விடுதலைப்புலிகளின் நிதியுடன் இயங்கும் நிறுவனமொன்றிற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை விற்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது இதனை அனுமதிக்கமாட்டோம் என சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் அவை எச்சரித்துள்ளன விடுதலைப்புலிகளின் நிதியுடன் இயங்கும் நிறுவனமொன்றிற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்சை விற்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன

 ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தை 1998 இல் எமிரேட்சிற்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்தவர்களே இந்த நடவடிக்கையின் பின்னால் உள்ளனர் என சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கத்தின் ஜனக விஜயபத்திரன தெரிவித்துள்ளார்
அடுத்த வாரம் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளனர் என தகவல்கள் தங்களிற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசியபாதுகாப்புடன் தொடர்புடைய நெருக்கடியொன்று உருவாவதாக ஜனாதிபதிக்கு தெரிவிக்க விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: