vinavu.com - சுகுமார் : தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல்
படையைச் சேர்ந்த 44 வீரர்கள் பலியானதற்கு பதிலடி தருவதாகக் கூறிக்கொண்டு
பாகிஸ்தானிற்குள் அத்துமீறி நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதலை
நடத்தியது. இதில் இந்திய விமானப்படை தவறுதலாக தமது சொந்த இராணுவ
ஹெலிகாப்டரையே ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியிருப்பது தற்போது தெரிய
வந்துள்ளது. இதில் ஆறு விமானப்படை வீரர்கள் உள்ளிட்ட எழுவர்
பலியாகியுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்னதாக 25 பாகிஸ்தானிய போர்விமானங்கள் இந்திய வான் எல்லையை கடக்க முயற்சி செய்ததாகவும் அப்பொழுது தற்காப்பிற்காக ஏவப்பட்ட ஏவுகணை இலக்குத் தவறியிருக்கலாம் என்றும் இந்திய அதிகாரிகள் கூறினர். Mi-17 V5 ஹெலிகாப்டர் ஒன்று தன்னுடைய சுற்றோட்டத்தை முடித்து திருப்பும் நேரத்தில் இந்த ஏவுகணை தாக்குத
ல் நடந்திருப்பதாக எக்கனாமிக் டைம்ஸ் கூறியிருக்கிறது.
“ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்ட அந்தக் கடைசி நேரத்தில் என்ன நடந்தது? நண்பனா எதிரியா என அடையாளம் (Identity, Friend or Foe) காண உதவும் பொறியமைப்பு வேலை செய்ததா இல்லையா என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று அப்பத்திரிக்கை கூறியது. ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஏவுகணையின் இலக்கு மாறியிருக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர் கீழே விழும் போது அதை நேரில் பார்த்தவர்கள் வானத்தில் பெரிய வெடியோசை கேட்டதாக கூறியிருக்கின்றனர்.
இரசியாவிடமிருந்து 116 கோடி ருபாய் விலைக்கு வாங்கப்பட்ட Mi-17 V5 ஹெலிகாப்டரில் இதுவரை பெரிதாக எந்த சிக்கலும் வந்ததில்லை. 2012-ம் ஆண்டிலிருந்து இந்த ஹெலிகாப்டர் பயன்பாட்டில் இருக்கிறது.
தொழில்நுட்ப சிக்கல் இருக்கலாம் என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க மனிதத் தவறுகள் இதில் இருக்குமானால் சம்மந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுவார்கள் என்று விமானப்படை உயரதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
படிக்க:
பாகிஸ்தானில் செயற்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு கார் வெடிகுண்டு மூலம் 44 இந்திய ரிசர்வ் படை வீரர்களை படுகொலை செய்ததாக இந்தியா குற்றம் சாட்டியிருந்த பின்னணியில் பாகிஸ்தானின் எல்லைக்குள் சென்று வான் தாக்குதலை இந்தியா நடத்தியது. ஆனால், தீவிரவாத பயிற்சி அமைப்புகள் எதுவும் பாகிஸ்தானில் செயல்படவில்லை என்று பாகிஸ்தான் மறுத்திருக்கிறது. மேலும், சந்தேகிப்படும் இடங்களில் சோதனை செய்ய இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கத் தயார் என்றும் பாகிஸ்தான் கூறியிருந்தது.

அதே சமயத்தில் இந்தியாவின் ‘துல்லியத்
தாக்குதல்’ இரைச்சலையெல்லாம் தாண்டி எப்படி அவை துல்லியமற்று தீவிரவாத
இலக்குகளை தாக்கவில்லை என்பதற்கு சமீபத்தில் ஐரோப்பிய செயற்கைகோளால்
எடுக்கப்பட்ட கூடுதல் தரமிக்க புகைப்படங்கள் சான்று பகர்கின்றன. ஆக
மோடியின் தேர்தல் ஜூம்லாவிற்காக 51 அப்பாவிகள் தங்களது இன்னுயிரை
இழந்திருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக