வெப்துனியா :
காங்கிரஸ் சார்பில் சீட் வழங்கப்படாததால் குஷ்பு டென்சனில் இருப்பதாகவும் பிரச்சாரத்திற்கு வர முடியாது என அவர் அடம் பிடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு காங்கிரஸில் சேர்ந்து 4 வருடங்கள் ஆகியும் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இந்த தேர்தலில் தமக்கு சீட் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருந்தார் குஷ்பு.
ஆனால் காங்கிரஸ் மேலிடம் அவருக்கு சீட் கொடுக்காமல் ஏமாற்றி விட்டது. நேற்று கட்சியில் வந்து இணைந்தவர்களுக்கெல்லாம் சீட் கொடுக்கும் போது இத்தனை வருடங்களாக கட்சிக்காக உழைக்கும் தமக்கு சீட் வழங்காததால் அவர் அதிருப்தியில் உள்ளார்.
இதனால் தேர்தல் பிரசாரத்தை தவிர்த்து அவர் வருகிறார். காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்தும் குஷ்பு பிரச்சாரத்திற்கு வராதது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரத்திற்கு வரும் படி குஷ்புவை அழைத்தால் தமக்கு ஷூட்டிங் உள்ளதால் வர முடியாது என கூறுகிறாராம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடத்திற்கு புகார் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ்சின் தர்மயுத்தம் போல குஷ்புவும் தர்மயுத்தம் நடத்தி வருகிறார் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக