செவ்வாய், 2 ஏப்ரல், 2019

அமமுக : நாங்கள் என்ன அதிமுக, திமுக போல விபரம் தெரியாதவர்களா செல்போனில் பேச? நாங்கள் எல்லாம் வாட்ஸ்-அப் கால்தான்

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: திமுக, அதிமுகவை முந்தும் தினகரன்“தேர்தல் பரப்புரைப் பயணத்தில் ஒரு ரவுண்டு முடித்துவிட்டு நேற்று சென்னை வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். தென் சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்காக வாக்கு சேகரித்துவிட்டு இரவு முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் ஸ்டாலின். அப்போது, ‘தமிழ்நாடு முழுக்க நமக்கு நல்ல வாய்ப்பு இருக்கு. ஆனா வேலூர்ல இப்படி ஆயிடுச்சே...’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். வேலூரில் துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டும், அதைத் தொடர்ந்த ரெய்டுகளும் ஸ்டாலினை ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்கிறதாம்.
ஸ்டாலின் மருமகன் சபரீசன் துரைமுருகனுக்கு போனவாரம் போன் செய்து, ‘அங்கிள்... உங்க வீட்டுக்கு இன்கம் டாக்ஸ் ரெய்டு வர வாய்ப்பிருக்குனு பேசிக்கிறாங்க. கொஞ்சம் அலர்ட்டா இருக்கச் சொல்லுங்க அங்கிள்’ என்று சொல்லியிருக்கிறார். அப்போது துரைமுருகன் தனக்கே உரிய நையாண்டியோடு, ‘அதெல்லாம் நம்மளை மீறி யாரு தம்பி வரப் போறாங்க’ என்று சொல்லிச் சிரித்திருக்கிறார். நேற்று இரவு நடந்த ஆலோசனையில் குறிப்பிட்டு வருத்தப்பட்டிருக்கிறாராம் ஸ்டாலின்.

இந்த நேரத்தில் தேர்தல் பறக்கும் படை, வருமானவரித்துறை, காவல்துறை மூன்று பிரிவினரும் தமிழகத்தில் அதிரடி சோதனைகள் செய்து பணத்தையும் தங்கக் கட்டிகளையும் வெள்ளி பொருள்களையும் பிடித்துவருகிறார்கள். ஆனாலும் திமுக, அதிமுக, அமமுக என மூன்று தரப்பினரின் பண விநியோகம் ஒருபக்கம் தொடரத்தான் செய்கிறது.
அதிமுக தரப்பில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அனைத்து தொகுதிகளுக்கும் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொண்டுபோய் சேர்த்துவிட்டார்கள். மேலும் இப்போது கூட அதிமுக சார்பில் செய்யப்படும் பண விநியோகத்தை தேர்தல் பறக்கும் படையினர் கண்டுகொள்வதில்லை என்பது பல சம்பவங்களின் மூலம் தெரியவருகிறது. தேர்தல் பறக்கும் படையில் இருப்பவர்கள் தாசில்தார்கள், செயற்பொறியாளர்கள் போன்ற அரசு அதிகாரிகள்தான். இவர்களில் சிலரை சரிகட்டி தங்கள் பணிகளைத் தொடர்கிறார்கள் அதிமுகவினர்.
ஆனால் திமுகவினரோ பணத்தை எப்படி எடுத்துப்போகிறோம், யாரிடம் கொடுக்கப்போகிறோம் என்று அலைபேசியில் உளறுகிறார்கள். திமுக விஐபிகள் தங்களுக்குள் வாட்ஸ் அப் காலில் பேசிக் கொள்ளும் நிலையில் அதை அடுத்தடுத்த நிலையில் செயலாக்க வேண்டிய நிர்வாகிகள் போன் கால் மூலம் பேசிக் கொள்கிறார்கள். ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் திமுக, அமமுக நிர்வாகிகளின் மூவ் என்ன, அவர்கள் பணப்பட்டுவாடா எப்படி செய்கிறார்கள் என்பதை அந்தந்த மாவட்ட உளவுத்துறை மூலம் தெளிவாகக் கண்டறியும் மாநில உளவுத்துறை அதை அப்படியே வருமான வரித்துறைக்கு பாஸ் செய்கிறது. இதை வைத்துதான் ரெய்டுகள் நடக்கின்றன.
ஆளுங்கட்சி கூட்டணி, எதிர்க்கட்சிக் கூட்டணி வேட்பாளர்கள் அவரவர் தொகுதியில் பணத்தை இறக்கிவிட்டார்கள். இதில் திமுகவைச் சேர்ந்த சிலர் சிக்கி வருகிறார்கள். அதேநேரம் தினகரனின் அமமுக பண விஷயத்தில் என்ன செய்துவருகிறது என்று விசாரித்தபோது சுவாரஸ்யமான தகவல்கள் அந்தக் கட்சி நிர்வாகிகள் தரப்பில் இருந்தே கிடைத்தன.
‘நாங்கள் என்ன அதிமுக, திமுக போல விபரம் தெரியாதவர்களா செல்போனில் பேசி சிக்கிக்கொள்ள, நாங்கள் எல்லாம் வாட்ஸ்-அப் கால்தான். தேர்தல் வேலையைப் பற்றி எங்கள் அண்ணன் தினகரனிடம் பயிற்சி எடுத்துக்கச் சொல்லுங்கள். தேர்தல் அறிவிக்கை வருவதற்கு முன்பு தினகரன் மக்கள் சந்திப்புப் பயணம் போனார் தெரியுமா? அப்போதே சேர வேண்டிய இடங்களுக்கு சேர வேண்டியதை எல்லாம் கொண்டு போய் சேர்த்தாகிவிட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் செய்யாத அளவுக்கு அமமுக அசத்திவருகிறது.
ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் குறைந்தது 1800 வாக்குச் சாவடிகள் (பூத்) உள்ளன. ஒரு பூத்துக்கு 33 பேர் இரண்டு மேற்பார்வையாளர் மொத்தம் 35 பேர் நியமிக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ 5ஆயிரம் கொடுத்தாகிவிட்டது. ஒரு பூத்துக்கு 1லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்யத் திட்டம். தொகுதிக்கு 50 சி திட்டம். ஒரு நபர் பத்து வாக்குகள் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் டார்கெட்.. ஒரு பூத்துக்கு 35 பேர் பூத்துக்கு குறைந்தபட்சம் 350 வாக்குகள் பெற்றால் போதும் தேனி, சிவகங்கை, தர்மபுரி, திருச்சி, இராமநாதபுரம் ஆகிய ஐந்து தொகுதிகளில் சத்தமில்லாமல் வாக்காளர்களைக் கவனித்து வாக்குகளை உறுதி செய்துவருகிறார்கள். மற்ற தொகுதியில் அதிகமான வாக்குகள் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் கணிசமான வாக்குகளை பெறுவதற்கு வாக்காளர்களுக்குச் சரியான முறையில் கொடுக்க திட்டமிட்டாகிவிட்டது’ என்கிறார்கள் அமமுக நிர்வாகிகள். ஆக பணப்பட்டுவாடா விவகாரத்தில் திமுக,அதிமுகவை விட தெளிவாக முந்திக் கொண்டிருக்கிறது அமமுக என்பதுதான் லேட்டஸ் கரன்சி பிட்ச் ரிப்போர்ட்” என்ற மெசேஜை செண்ட் செய்துவிட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அ

கருத்துகள் இல்லை: