செவ்வாய், 2 ஏப்ரல், 2019

இயக்குனர் மகேந்திரன் காலமானார் ... உதிரிப்பூக்கள் ,முள்ளும் மலரும் . தங்கபதக்கம் ...

நக்கீரன் :சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில் சிகிச்சை
பலனின்றி இயக்குனர் மகேந்திரன் காலமானார்.
சென்னையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த மகேந்திரனின் வயது 79. ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும், ஜானி குறிப்பிட்ட உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மகேந்திரன்.
சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம் உள்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார் இயக்குனர் மகேந்திரன். விஜயின் தெறி, ரஜினி பேட்ட, உதயநிதியின் நிமிர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் மகேந்திரன் காலமானதை அவரது மகன் ஜான் மகேந்திரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: