புதன், 3 ஏப்ரல், 2019

பாஜகாவின் வெற்றிக்கு SDPI கட்சியும் . அசதுத்தீன் உவைசியின் மஜ்லீஸ் கட்சியும் பேருதவி ...

Mansoor Mohammed : தியாக தலைவி ஆர்எஸ்எஸின் ஊதுகுழலாய்
எங்கெல்லாம் பாஜக
பலவீனபட்டுநிற்கிறதோ அங்கெல்லாம் இஸ்லாமிய வாக்குவங்கியை சிதறவைத்து அதன் நேரடி பலனை பாசிச பாஜகவிற்கு தரும் ஒற்றை வேலையோடு களம் காணுகிற அமைப்பு .. sdpi
கர்நாடகத்தில் அதன் செயல்பாடு மிகப்பெரிய அளவில் பாஜகவிற்கு பலன் தந்தது .. அதேபோல தெலுங்கானாவிலும் உ.பி.யிலும் சில வடமாநிலங்களிலும் இஸ்லாமிய வாக்குகளை பிரித்து வெளிப்படையாகவே பாஜக ஆட்சிக்கு உதவிய அசதுத்தீன் உவைசியின் மஜ்லீஸ் கட்சியும் வெகுவாக பயன்பட்டது . இவர்களுக்கு என்ன வேண்டும் .. இஸ்லாமியர்களுக்கான உரிமைகளா இல்லை பணம் பதவியா .. தொடர்ந்து இவர்களின் செயல்பாடுகளை கவனித்தால் அதன் பின்னில் மறைந்திருக்கும் உண்மை இஸ்லாமிய ஒற்றுமையை சிதைப்பது .. அதோ இவர்கள் தான் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தை காக்க வந்த ரட்சகனை போல பேசி திரிகிறார்கள் .. 

ஒரு கட்சி தொடங்கி நடத்துவதிலோ அல்லது பல பிரிவுகளாக செயல்படுவதிலோ நமக்கொன்றும் பலனில்லை ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் நடத்தலாம் ஆனால் நாட்டின் நிலை கருதி யாரை பின்துணைக்க வேண்டுமென்ற அறிவு வேண்டும் தங்களால் தனியாக எதையும் சாதித்துவிட முடியாதென்ற உண்மையை உணரவேண்டும் .. எந்த மக்களுக்காக போராட நினைக்கிறோமோ அவர்களின் மேம்பாடு கல்வி போன்ற விடயங்களில் மெச்ச தகுந்த நிலையை உருவாக்க பாடுபடவேண்டும் இன்றைய பொது எதிரி யார் என்ற அடிப்படை புரிந்திருக்க வேண்டும் .. யாரோடு சேர்ந்தால் அவர்களை வீழ்த்தலாமென்ற வியூகம் அறிதல் வேண்டும் .. தனியாகவோ அல்லது வெகுமக்கள் ஆதரவில்லாதவர்களோடோ சேர்ந்து பயனிப்பதால்
தோல்வி மட்டுமல்ல எதிரியை ஒருவகையில் பலபடுத்துகிறோம் என்ற எளிய புரிதல் கூட இல்லாதவர்கள் எப்படி ஒட்டுமொத்த சமுதாய நலனை பற்றி சிந்திக்கவோ கவலைபடவோ உழைக்கவோ முடியும் .. தெளிவின்மை தோல்வி மட்டுமல்ல சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்
..
தியாக தலைவி சசிகலா
உண்மையில் வெட்கபடவேண்டும் ஜெயலலிதாவோடு சேர்ந்து கொள்ளையடித்து அதை நீண்ட சட்ட போராட்டத்தால் சிறப்பு நீதிமன்றத்தில் தண்டிக்கபட்டு .. உச்சநீதிமன்றமே திருடியது உண்மையென தீர்ப்பை இறுதி செய்து சிறையில் கழிப்பவர் தியாகியாம் .. அரசு நிர்வாகத்தையே தவறாக பயன்படுத்தி கொள்ளையடித்தவரை .. அரசு கஜானாவிலிருந்து மருந்திற்கு தேனை கூட சாப்பிட அனுமதி கோரிய
கலீபா உமரை பின்பற்றும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தியாகி என்றழைப்பது தான் கேவலத்தின் உச்சம் .. அரசியலில் வெற்றி தோல்வி அல்ல பிரச்சனை .. கொண்ட கொள்கையில் ஏற்றுக்கொண்ட கோட்பாட்டிலிருந்து மாறி நிற்கிற அவலநிலை கேலிக்குரியது .. ஊழலுக்காக நிரூபிக்கபட்டு சிறை சென்ற தலைவியை பின்பற்றும் கட்சியோடு கூட்டு வைத்து கொள்கிறவர்களால் சமுதாயத்திற்கு நல்லதை செய்திட முடியாதென இஸ்லாமிய சமூகம் உணரவேண்டும் .. புறக்கணிக்கபடவேண்டியவர்கள்
இப்படி நிறைய இஸ்லாமிய கட்சிகள் புற்றீசலைப்போல வந்துக்கொண்டே இருப்பது சமுதாயத்திற்கு கேடு ..
..
"பெருமையும் சிறுமையும் தான் தர வருமே"..
..

கருத்துகள் இல்லை: