Rubasangary Veerasingam Gnanasangary : 2020இல் பூட்டான் முழு அளவிலான
இயற்கை விவசாய நாடாக மாற உள்ளதாக பெருமைப்பட்டுக் கொள்கிறது. பூட்டானைப் பொறுத்தவரையில் அது முடியும். அந்த நாட்டின் நிலப்பரப்பை அங்கு வாழும் மக்கள் தொகையால் பிரித்தால் தலைக்கு 12.8 ஏக்கர் நிலம் வருகிறது. இலங்கையரிடம் 0.72 acre, இந்தியரிடம் 0.6 acre, கியூபா நாட்டவரிடம் 2.42 acre என்னும் அடிப்படையில் நிலத்தின் கணக்கு வருகிறது. Common Sense உள்ளவர்களுக்கு இந்த கணக்கு புரியும்.
கியூபா ஒரு காலத்தில் உலக சீனி உற்பத்தியில் 25% பங்குகளை வகித்து முதலாம் இடத்தில் இருந்தது. இலங்கையில் தேயிலை எப்படி விவசாயத் துறை சாராமல் தொழில் துறையில் (Industrial Sector) அடங்குகிறதோ அப்படித்தான் கியூபாவில் கரும்பு பயிர் செய்கையும். 200 சீனி தொழிற்சாலைகள் வரை இருந்தன. 1990 ஆம் ஆண்டுவரை எட்டு மில்லியன் தொன்களுக்கும் அதிகமான சீனியை உற்பத்தி செய்து வந்ததுள்ளது. அப்போது சோவியத் ரசியா சலுகை அடிப்படையில் மிகவும் அதிக விலைகொடுத்து சீனியை இறக்குமதி செய்து மிகவும் குறைந்த விலையில் இரசாயன உரங்கள், கிருமி நாசினிகள், இயந்திரங்கள், கோதுமை, உருளைக்கிழங்கு போன்றவற்றை கியூபாவுக்கு வழங்கி உதவி வந்தது. இதனால் கியூபா நான்கு பில்லியன் டாலர்கள் வரை சோவியத் ரசியா மூலம் பயன்பெற்று வந்ததுள்ளது.
1991க்குப் பின்னர் சோவியத் ரசியாவின் உடைவினால் கியூபாவின் நிலை தலைகீழாக மாறி இருந்தது. அப்போது ஏற்பட்ட ஒரு புரட்சிதான் Urban Farming. மொட்டை மாடிகளில் கூட கோழி வளர்த்தார்கள். Urban farming, வீட்டுத் தோட்டம் பற்றியது அல்ல எனது இந்த கட்டுரையின் நோக்கம்.
இலங்கை சனத்தொகையில் பாதியளவே உள்ள கியூபா இயற்கை விவசாயத்துக்கு பேர் போனது என்பது ஒருபுறம் இருக்க 60% தொடக்கம் 80% வரையான உணவுப் பொருட்களை அந்த நாடு இறக்குமதி செய்கிறது. அதில் கோதுமை, அரிசி, பால், முட்டை, கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, சமையல் எண்ணெய், சோளம், விதை உருளைகிழங்கு மற்றும் விலங்குத் தீவனத்துக்கான உள்ளீடுகள் போன்றன அடங்கும். இவை இரண்டு பில்லியன் டாலர்கள் வரை வருகிறது. ஒரு காலத்தில் எட்டு மில்லியன் தொன் சீனியை உற்பத்தி செய்த கியூபா இப்போது மூன்று மில்லியன் தொன்களுக்கும் குறைவான சீனியையே உற்பத்தி செய்து வருகிறது. அந்தளவுக்கு உற்பத்தி திறன் குறைந்து விட்டது. கடந்த வருடம் வெறும் 4,200 Tonnes organic சீனியை மாத்திரமே உற்பத்தி செய்துள்ளது மற்றும்படி கியூபாவின் விவசாய உற்பத்திகள் எல்லாமே organic அல்ல. கியூபாவுக்கு தேவையான இரசாயன உரத்தை வெனிசுவேலா நாடு வழங்கி வந்துள்ளது என்பது மட்டும் அல்லாது கியூபாவும் தன் பங்குக்கு உற்பத்தி செய்கிறது.
எதற்காக இதை எல்லாம் எழுதுகிறேன் என்று கூறுவதற்கு முன்னர் இந்தியா பற்றிய சில தகவல்கள். அரிசி உற்பத்தியில் உலகில் முதலாம் இடத்தையும், கோதுமை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தையும் இந்தியா வகிக்கிறது. சீனி உற்பத்தியில் பிரேசிலை அடுத்து இரெண்டாம் இடத்தில் இருக்கிறது. அப்போது 8 மில்லியன் தொன் சீனியை உற்பத்தி செய்து கியூபா உலகில் முதலாம் இடத்தில் இருந்தது. தற்போது இந்தியா 33 மில்லியன் தொன்வரை உற்பத்தி செய்து உககில் இரெண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த வருடம் கியூபா பிரான்சிடம் இருந்து சீனி இறக்குமதி செய்துள்ளது என்பதை சொன்னால் நம்புவீர்களா? கியூபாவில் உற்பத்தியாகும் காய்கறி பழங்களில் இருபது சதவீதமே ஓகானிக் ஆகும்.
இந்தியாவானது 4.7 million hectare நிலப்பரப்பில் கரும்பு பயிடுருகிறது. மேலும் 43 million hectare நிலத்தில் நெல்லும், 29.8 million hectare நிலத்தில் கோதுமையும் 22 to 29 million hectare நிலத்தில் எண்ணெய் விதைகளும், 9.0 million hectare நிலத்தில் சோளமும் பயிருடுகிறது. 6.3 million hectares நிலத்தில் பழங்களும், 10.1 million hectare நிலத்தில் காய்கறிகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை மட்டுமே மொத்தமாக 128 மில்லியன் எக்டேயர்கள் அதாவது 316 மில்லியன் ஏக்கர்கள். இன்னும் பயறு,பருப்பு சிறுதானியங்கள் என்று அவற்றின் உற்பத்தியில் இந்தியா உலகில் முன் நிலையில் நிக்கிறது.
Broiler கோழி, leghorn முட்டைகள், கலப்பின மாட்டின் பால் பற்றி தவறான தவல்கள் organic அமைப்பினரால் திட்டமிட்டு பரப்பப் படுவதால், அவை பற்றி முதலில் தனித்தனியே எழுதி முடித்தபின்னர் மிகுதியை எழுதுகிறேன். நான் இப்போது இந்த தகவல்களை பகிர்ந்ததன் காரணம் அண்மையில் ஒருவர் share பண்ணிய கட்டுரையே. அதில் ஒருவர் துணைவேந்தருக்கு சவால் விடுகிறார். சவால் விட்டவருக்கு ஏற்கனவே ஒருவர் ஒரு ஏக்கரில் 100 tonne கரும்பு அறுவடை செய்து விருதும் வாங்கியது தெரியாது. organic அமைப்பினர் இலாபம் சம்பாதிப்பதற்காக மக்களை முட்டாளாக்கிறார்கள். #JaffnaOrganic
//“ரசாயன விவசாயத்தில் ஜெயித்தவர்களைக் காட்டினால் 2 லட்சம் ரூபாய் பரிசு...” துணைவேந்தருக்குச் சவால்விடும் ‘புளியங்குடி’ அந்தோணிசாமி!
"மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே வரும் சூழலில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இயற்கை விவசாயம் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிப்பது சாத்தியமில்லை. அனைத்துப் பயிர்களையும் நூறு சதவிகித இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்ய முடியாது. சில பயிர்களை வேண்டுமானால் அப்படி உற்பத்தி செய்யலாம். பாதுகாப்பான அங்கீகரிக்கப்பட்ட உரங்களைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்துவதில் தவறில்லை" - இப்படியான மனநிலையில் இலங்கையிலும் பல விவசாய அதிகாரிகள் இருக்கின்றார்கள்... அவர்களுக்காக இது...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக