தினமணி :சென்னை: தமிழகமெங்கும் சிலம்பை ஒலிக்கச் செய்தவர் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்(91) வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார்.
'சிலம்புச் செல்வர்' மபொசிக்குப் பிறகு
இன்றுவரை தமிழகமெங்கும் சிலம்பு ஒலித்துக் கொண்டிருப்பதற்கு தமிழறிஞர்
சிலம்பொலி செல்லப்பன்தான் காரணம் என்று அறியப்பட்டவர்.
நூல்களின் திறனாய்வுக்குப் பெரும்பாலும் மேற்கத்திய அறிஞர்களின் மேற்கோள்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அதை முழுமையாகத் தவிர்த்தவர் சிலம்பொலியார். தமிழ் நெறி சார்ந்த நிலையில் முற்றிலும் தமிழ் நூல்களை மட்டுமே முன்னோடியாகக் கொண்டு படைப்பிலக்கியங்களைத் திறனாய்வு செய்தது சிலம்பொலி செல்லப்பன் வகுத்த தனித்த நெறியாகும். செம்மொழியான தமிழ் மொழிக்கு இன்றளவும் வேறெந்த மொழியையும் இணையாகக் கொள்ளாத பண்பாளர் அவர். மூன்று முதல்வர்களிடம் பணியாற்றிய பெருமைக்குரிய தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக