வெள்ளி, 5 ஏப்ரல், 2019

தி.க தலைவர் வீரமணி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் கல்வீச்சு! தி.க.வினர் 2 பேருக்கு காயம்

attack nakkheeran.in-ஜெ.டி.ஆர்: . ஹிந்து மதக் கடவுள் கிருஷ்ணர் குறித்து, திராவிடர் கழக தலைவர் வீரமணி, விமர்சித்த வீடியோ,வேகமாக பரவி வருகிறது. அதில் தி.க., தலைவர் வீரமணி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமான கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹிந்துக்களிடம், குறிப்பாக கிருஷ்ணரை வழிபடுவோரிடம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், கிருஷ்ணரை வழிபடும் ஹிந்து அமைப்பினர், தி.மு.கவுக்கு எதிராகவும், வீரமணிக்கு எதிராகவும், போராட்டங்களை துவக்கி உள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றது. ஆசிரியர் வீரமணி அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களும் எழுப்பபட்டு வருகிறது. இந்தநிலையில் 
< திருச்சி மக்களவை தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து இன்று திருச்சியில் கீரக்கொள்ளை பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கற்க வந்திருந்தார். பெரம்பலூர் கூட்டத்தை முடித்து விட்டு 8.35க்கு திருச்சி பொதுகூட்டத்திற்கு வந்தார்.

ஆசிரியர் வீரமணி வருவதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரச்சார மேடையில் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது கூட்டத்தில் இந்துக்களையும், இந்து கடவுள்களையும் அவமான படுத்தி பேசியதாக கூறி இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென மேடையை நோக்கி செருப்புகளை வீசியுள்ளனர். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே காந்திமார்கெட் போலிசார் செருப்பு வீசியது யார் என தேட துவங்கினார்கள். 

 The stone and  slippers in the campaign meeting of dK:2 people injured


அதற்குள்ளாக ஆசிரியர் மேடைக்கு வந்து பேச ஆரம்பித்தார். அதன் பிறகு எந்த சலசலப்பு இல்லை, அவர் பேசி முடித்து கீழே இறங்கிய போது எங்கிருந்த கற்கள் மேடையை நோக்கி பாய்ந்தது. அப்போது மேடையில் இருந்தா காட்டுரை சேர்ந்த தி.க. தோழர் மீது அடிப்பட்டது. ஆசிரியர் வீரமணி அவர்களுடன் இருக்கும் குணசேகரன் அவருக்கு கண்ணில் கல் அடிப்பட்டு இரத்தம் வழிய ஆரம்பித்தது. 

NN


இதற்கு இடையே ஆசிரியர் வீரமணி காரின் முன்பு இந்து முன்னியை சேர்ந்தவர்கள் சிலர் மறிக்க ஆரம்பித்தனர். உடனே அங்கிருந்த போலிஸ் அவர் உடனே அவர்களை கைது செய்து காந்திமார்கெட் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். 


இந்த சம்பவத்தில் இந்துமுன்னணியை சேர்ந்த மணிகண்டன், போத்தராஜ் உள்ளிட்ட 12 பேரை முதற்கட்டமாக கைது செய்து இருக்கிறது. 


இது குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் காந்திமார்கெட் காவல்நிலையத்தில் புகார் செய்து கொண்டுயிருக்கிறார்கள். ஆசிரியர் வீரமணி அவர்களை பத்திரமாக பெரியார் மாளிகைக்கு அழைத்து சென்றனர் திராவிடர் கழக தோழர்கள்.  

கருத்துகள் இல்லை: