nakkheeran.in - kirubahar :
புல்வாமா
தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய வான்படை பால்கோட் பகுதியில் நடத்திய
தாக்குதலில் இந்திய வான்படையின் விமானங்கள் எந்த பாகிஸ்தான் விமானத்தையும்
சுட்டு வீழ்த்தவில்லை என அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வான்படை பாகிஸ்தானின் எப்-16 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி விமான பாகங்களை காண்பித்தது. இந்நிலையில் அமெரிக்க ஊடகம் இப்படி செய்தி வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த செய்திப்படி, அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வாங்கிய எப்-16 ரக விமானங்கள் சுடப்பட்டதாக செய்தி வெளியாகியவுடன், பாகிஸ்தான் சார்பில் அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு அழைக்கப்பட்டதாகவும், அவர்கள் அங்குள்ள விமானங்களை கணக்கெடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த கணக்கின்படி ஆவணங்களில் உள்ள விமானங்களின் எண்ணிக்கையும், பாகிஸ்தான் படையினரிடம் இருந்த விமானங்களின் எண்ணிக்கையும் சமமாக உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடிப்படையாக கொண்டு அமெரிக்க ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக