மின்னம்பலம் :மார்ச்
31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் காஸ் சிலிண்டர் இணைப்புத்
துண்டிக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சமையல் காஸ் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதில் முறைகேடுகளைத் தடுக்க சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சமையல் காஸ் இணைப்பு வைத்திருப்பவர்கள் வருகிற மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லையென்றால் சமையல் காஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், “சமையல் காஸ் சிலிண்டர் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் தங்களது விவரங்களைச் சம்பந்தப்பட்ட காஸ் ஏஜென்சிகளிடம் தெரிவிக்கவில்லை என்றால் மார்ச் 31ஆம் தேதிக்கு மேல் சிலிண்டர்கள் வழங்கப்படாது” என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக