நக்கீரன் :போக்குவரத்து காவல்துறையினர் சோதனைக்காக நிறுத்திய லாரியில், மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மனைவியின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் மணிகண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் தன் மனைவியுடன் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மதுரவாயல் செல்லும் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த லாரியை சாலையின் நடுவே வந்து காவல்துறையினர் மடக்கியுள்ளனர்.
இதில் லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த தியாகராஜன் லாரியில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின்னால் வந்த மற்றொரு லாரி தியாகராஜன் மீது ஏறியதில் மனைவி கண்முன்னே தியாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். போக்குவரத்து காவல்துறையினரின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் எனக்கூறி அந்த வழியே வந்த பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 2 மணி நேரத்திற்கு மேலாக மதுரவாயல் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக