சனி, 3 பிப்ரவரி, 2018

பாகிஸ்தான் அமைச்சர் மனைவியை சுட்டுகொன்று தற்கொலை செய்துகொண்டார்

மனைவியை சுட்டுக்கொன்ற பாக். அமைச்சர் தானும் தற்கொலை மாலைமலர்:  இ்ஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிந்து மாகாண அமைச்சர் தனது மனைவியை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
பாகிஸ்தானின் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹசர்கான் பைஜரானி, இவரது மனைவி பரிதா ரஸாக், பைஜரானி, சிந்து மாகாணத்தில் அமைச்சராகவும், மனைவி பரிதா ரஸாக் பத்திரிகை நிருபராகவும் உள்ளார். நேற்று கராச்சியில் உள்ள அவர்களது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருவரும் பிணமாக கிடந்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் பைஜரானி முதலில் மனைவியை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு பின்னர் அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த விபரீதம் நடந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்<

கருத்துகள் இல்லை: