மாலைமலர் :கர்நாடக மாநிலத்தின் பா.ஜ.க. முன்னாள்
மந்திரியான ஆனந்த் சிங், இன்று பா.ஜ.க.வில் இருந்து விலகி முதல் மந்திரி
சித்தராமையா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். #BJPminister
#Congress
பெங்களூர்:
கர்நாடகம்
மாநிலத்தின் பல்லாரி மாவட்டத்தில் விஜயநகரம் தொகுதியின் பா.ஜ.க.
எம்.எல்.ஏவாக இருந்தவர் பி.எஸ்.ஆனந்த் சிங். இவர், பா.ஜ.க.வில் இருந்து
விலகி தனது ஆதரவாளர்களுடன் இன்று காங்கிரசில் இணைந்தார்.
இதுதொடர்பாக
ஆனந்த் சிங் கூறுகையில், பா.ஜ.க.வினர் தொடர்ந்து என்னை பற்றி தவறாக
சித்தரித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்தே நான் கட்சியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தேன். மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் முதல் மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரின் முன் காங்கிரசில் இணைந்தேன். மேலும், வரும் சட்டசபை தேர்தலில் பல்லாரி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற பாடுபட போகிறேன் என தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.க. முன்னாள் மந்திரி காங்கிரசில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக