வியாழன், 1 பிப்ரவரி, 2018

ஒரே தேசம் ஒரே தேர்தல் ஒரே கட்சி ஒரே தலைவர் ... வடகொரியா கெட்டுது போ ..!

nakkeeran :மத்தியில் ஆளும் பாஜக அரசு ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அறிவித்து, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. அதற்கான திட்டமிடலும், பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மேடையில் பேசிய ப.சிதம்பரம், ‘தற்போது இருக்கும் அரசியல் சாசனத்தை வைத்துக்கொண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தமுடியாது. அதற்கான அதிகாரத்தையும் நம் அரசியல் சட்டம் வழங்கவில்லை.
;நாட்டில் 30 மாநிலங்கள் உள்ளன. அவை அனைத்திற்குமான தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்ற ஜனநாயக ரீதியாக சாத்தியமில்லை. மத்தியில் ஆளும் அரசு ஒரே தேசம் ஒரே வரி என்று கொண்டு வந்த ஜி.எஸ்.டி. இன்று வெற்றுக் கூச்சல் ஆகியிருக்கிறது. இப்போது ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அது மீண்டும் ஒரு வெற்றுக்கூச்சலாகவே மாறும்’ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: