தமிழர்களுக்கு அவமானம் வெட்கக்கேடு
இன்று தமிழ்நாட்டின் முன்னாள் தொல்லியல் துறை தலைவர் ஆர் நாகசாமிக்கு பத்மவிபுஷன் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாகசாமி என்பவர் தான் தமிழ் என்பது ஆதி மொழிக் கிடையாது, சமஸ்கிருதத்தில் இருந்து உருவான மொழி என்று ‘MIRROR OF TAMIL AND SANSKRIT’ என்று நூல் எழுதி வெளியிட்டவர். அவர் ஒரு பிராமணர். அவருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்து பத்மவிபுஷன் கிடைப்பது என்பது தமிழர்களுக்கு அவமானம், வெட்கக்கேடு.
ஆர்.நாகசாமியின் நூலில் தெரிவித்துள்ள கருத்துக்கள் யாவும் முழு அபத்தம் என்று மறுத்து ‘’தமிழும், சமஸ்கிருதமும்’’ என்ற எதிர் புத்தகத்தை வெளியிட்ட தேவ பேரின்பன் எளிமையான வாழ்வு வாழ்ந்து மறைந்தார். தன்னுடைய புத்தகத்தில் ஆணித்தரமாக ஆர். நாகசாமியின் புத்தகம் அபத்தம் என்பதை தெரிவித்திருக்கிறார்.
தன் நூலில்
‘’ஆர். நாகராஜன் மொழியியல் அடிப்படை கோட்பாடுகள், மொழியின் வரலாறு குறித்த அறிவியல் ஆகியவைகளைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் தமிழை கொச்சப்படுத்துகிறார், சாதி ஏற்பாட்டையும், பிராமணிய சனாதன முறைகளையும் புனிதப்படுத்துகிறார். வரலாற்று ஆய்வு என்ற பெயரால் சாதிய சமூகவியலை நியாயப்படுத்துகிறார்.
தமிழுக்கு தனித்தகுதி இல்லை எனவும், தமிழை உருவாக்கியதும், தமிழரின் பண்பாட்டை உருவாக்கியதும் சமஸ்கிருதமும், வேதம் சார்ந்த பிராமணர்களுமே என்ற அரிஞர் நாகசாமியின் மொழியியல் கொள்கை படு பிற்போக்கானதாக உள்ளது’
ஒரு சமுதாயத்தின் வரலாறு, அச்சமூகத்தின் உள் இயக்கத்தின் விளைவே என்பதனையும், மக்களின் வாழ்க்கை முறைகளின் ஏற்படும் ஏற்படும் போராட்டமே வரலாறு என்பதை மறுத்து, வேத, உப நிடதங்களில் இருந்தும், பிராமணர்களிடமிருந்தே தமிழர்களின் வரலாறு தொடங்குகிறது என்ற கொள்கையை அறிஞர் இராமசாமி புதிய பாதையாக முன்வைக்கிறார். 19,20 ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற ஆரிய திராவிட விவாதத்தை ஆரிய பிராமண மேன்மையை நிலைநாட்டும் நோக்கோடு மறுபடியும் துவக்குகிறார்’’
என ஆர். நாகசாமியின் கருத்துக்களை தேவ. பேரின்பன் சாடுகிறார். பார்ப்பன மேலாதிக்க எண்ணம் கொண்ட நார்சிஸ்ட் என நாகசாமியை வர்ணிக்கிறார்.
இப்படிப்பட்டவருக்கு தான் இன்றைக்கு பத்மவிபுஷன் பட்டம் கிடைத்திருக்கிறது.
நாம், நம் மொழியையும், இனத்தையும், பாரம்பரியத்தையும் காப்பாற்ற வேண்டுமென்றால் இப்படிப்பட்ட பார்ப்பனிய சதிகளுக்கு எதிராக போராடிக் கொண்டே தான் இருக்க வேண்டும். அதில் எந்தவித சமரசத்தையும் என்றும் செய்துகொள்ள முடியாது.
இந்திய சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் மறைந்து, சமத்துவம் அமைய சாதிய அமைப்பு அழிக்கப்பட வேண்டும். சாதிக்கட்டுமானம் இடிக்கப்பட வேண்டும். இதற்கு எதிரானது பார்ப்பனியமும், பாரதிய ஜனதா கட்சியும்.
மருத்துவர். இரா. செந்தில்
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக