வியாழன், 1 பிப்ரவரி, 2018

2018 - 2019 பட்ஜெட் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்! - பட்ஜெட் அப்டேட்

நக்கீரன் :மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2018 - 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார்.


அதன் முக்கிய அம்சங்கள்.. 

1. அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்குவது. இனி அனைத்துப் பயிர்களுக்கும் உற்பத்தி விலையை விட ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்

2. கிராமப்புற சந்தைகள் இனி கிராமப்புற வேளாண் சந்தைகளாக மேம்படுத்தப்படும்

3. இந்த வருட பட்ஜெட் வேளாண்மை மற்றும் கிராமப்புற பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது

4. மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயற்கை வேளாண்மை செய்வதற்கு ஊக்கப்படுத்தப்படும்

5. வேளாண் சந்தைகளை மேம்படுத்துவதற்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

6. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2 கோடி கூடுதல் கழிவறைகள் கட்டித் தரப்படும்

7. 4 கோடி வீடுகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கப்படும்

8. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும்

9.  ரயில்வே திட்டங்களுக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் 
10. அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 80,000 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும். 
11. மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு தொகை 50,000 ஆக நிர்ணயிப்பு
12. கடுமையான நோய்களுக்கான மானியம் ரூ.1,00,000 மாக உயர்த்தப்பட்டது.
13. ஒரு குடும்பத்திற்கு, வருடத்திற்கு  ரூ. 5 லட்சம் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 
14. அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.
15. சிறு,குறு நிறுவனங்களுக்கான உற்பத்தி செலவு மானியம் 1.5 மடங்கு அதிகரிக்கப்படும்

16. அனைத்து துறைகளிலும் 12% புதிய ஊழியர்கள் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்
17. தேசிய அளவில் புதிய உடல்நல பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும் இதன்படி ஐந்து லட்சம் ரூபாய்க்கான குடும்ப மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை: