நடிகர் ரஜினிகாந்த கெய்க்வாட் ( பார்ப்பனர் ) என்ற பெயரை கொண்ட அவரது முன்னோர்கள் மராட்டிய மாவீரன் சிவாஜியின் வம்சத்தை ஏமாற்றி மராட்டிய சாம்ராஜ்யத்தை கைப்பற்றிய முதலாம் பெஷ்வா பாஜி ராவ் என்ற பார்பன முதலமைச்சரின் உறவினர்கள்
Krishnavel T S : இந்திய சூப்பர் ஸ்டார்கள்
அமிதாப்பச்சன் என்ற பெயர் இந்தியாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் பெரும் அளவில் பேசப்பட்ட ஒரு பெயர் ஒரு நபர், மற்றொருவர் ரஜினிகாந்த்
இந்த கட்டுரை எழுத வேண்டிய காரணம் ஏன் ஏற்பட்டது என்றால், சில நாட்களுக்கு முன் ஒரு வடஇந்திய நண்பர் என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது “உங்கள்” தமிழ் நாட்டில் மட்டுமே சாதி மறுப்பு உள்ளது என்று பெரிதாக அலட்டிக் கொள்ளவேண்டாம்,
உங்களுக்கே தெரியும் “எங்கள்” வடஇந்தியாவில் முதல் பெயருக்கு பின் இருக்கும் இரண்டாவது பெயர் அவரவர் சாதியை குறிக்கும். அமிதாப்பச்சன் என்ற பெயரில் பச்சன் என்பது அவரது சாதி பெயர் அபிஷேக்பச்சன் என்பதில் பச்சன் சாதி பெயர்
ஐஸ்வர்யா ராய் என்பதில் ராய் என்பது சாதி பெயர்.
இவ்வளவு ஏன் பிரகாஷ்ராஜ் என்ற வில்லன் நடிகரின் பெயர் உண்மையில் பிரகாஷ் ராய், அவரும் ஐஸ்வர்யா ராயும் ஒரே சாதியினர் தெரியுமா. நீங்கள் சொல்வது போல வடஇந்தியாவில் எல்லா மட்டத்திலும் சாதி பார்கிறார்கள் என்று பொதுவாக சொல்லாதீர்கள்.
உங்கள் ரஜினிகாந்த் ஒரு பஸ் கண்டக்டர் என்ற நிலையில் இருந்து ஒரு சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தது போல, ஒரு வறுமையான குடும்பத்தில் பிறந்து தன உழைப்பால் உயர்ந்த அமிதாப்பச்சன் தன் மகனுக்கு ஐஸ்வர்யா ராய் என்ற வேறு சாதி பெண்ணை திருமணம் செய்து வைக்கவில்லையா என்று கேட்டார்.
ரஜினிகாந்த் சொல்வது போல சொல்லவேண்டும் என்றால், எனக்கு “தலே சுத்திரிச்சு”
அவருக்கு நான் கொடுத்த விளக்கங்களே பின்வருவன: பிகு – அந்த வடஇந்திய நண்பர் இனி என்னுடன் குடிப்பதில்லை என்று “மா – கி - கசம்” செய்திருப்பதாக வேறு ஒரு நண்பர் மூலம் கேள்வி பட்டேன்.
நான் அவரிடம், “மிஸ்டர் சந்தீப்” என்று தொடங்கினேன், உடனே இடைமறித்த அவர்..... ப்ளீஸ் கால் மீ மிஸ்டர் திவாரி, என்றார். நான் சொன்னேன், அதெல்லாம் அய்யா பெரியாருக்கு முன்பு மட்டுமே, தமிழ் நாட்டில் நாங்கள் முதலியார்வாள் பிள்ளைவாள் என்றெல்லாம் கூப்பிட்டது, தமிழ்நாட்டில் உங்கள் முதல் பெயர் சொல்லித் தான் நாங்கள் அழைப்போம் பிடிக்கவில்லை என்றால் அன்பிரண்டு செய்துவிடுங்கள். உடனே அவர் “ஒகே ஒகே கம் டு த பாய்ன்ட்” என்றார்.
மிஸ்டர் சந்தீப், ரஜினிகாந்த் குறித்து நீங்கள் சொன்னது உண்மைதான், ஒரு பஸ் கண்டக்டராக தன் வாழ்வை தொடங்கி தன் உழைப்பால் உயர்ந்தவர் தான். பிறப்பால் மராட்டியர், வளர்ப்பால் கன்னடியர், தொழில் மற்றும் தற்போதைய சூழலில் அவர் தமிழர் தான் என்று கூட ஒத்துக்கொள்கிறேன்.
ஆனாலும் கெய்க்வாட் என்ற சாதி பெயரை கொண்ட அவரது முன்னோர்கள் மராட்டிய மாவீரன் சிவாஜியின் வம்சத்தை ஏமாற்றி மராட்டிய சாம்ராஜ்யத்தை கைப்பற்றிய முதலாம் பெஷ்வா பாஜி ராவ் என்ற பார்பன முதலமைச்சரின் உறவினர்கள் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
பரோடா நகர் இன்றைய குஜராத் மாநிலத்தில் இருக்கிறது, ஆனால் மராட்டிய ராஜ்ஜியம் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பஞ்சாப் வரை சென்று சண்டையும் செய்தனர்.
முதலாம் பெஷ்வா பாஜி ராவின் தலைமையில் பார்பனர் ஆட்சி அமையும் போது பரோடா நகரின் முதல் அரசனாக 1721-ல் முடிசூடிக்கொண்ட பார்பனன் தான் பிலாஜி ராவ் கெய்க்வாட்.
ஒய்.ஜி.பார்த்தசாரதி குடும்பம் ரஜினிகாந்த் உழைப்பால் உயர்ந்தவர் என்ற காரணத்தால் லதாவை அவருக்கு திருமணம் செய்து கொடுக்கவில்லை, அவர் பார்பனர் என்ற காரணத்தால் தான் திருமணம் செய்து கொடுத்தனர்.
மோகன்தாஸ் காந்தியை கொன்ற கோட்சே மற்றும் குழுவினருக்கு பணவுதவிகள் செய்தது இந்த பரோடா மன்னன் கெய்க்வாட் உட்பட பல மராட்டிய சிறு மன்னர்கள் ஆனால் அவர்கள் எல்லோரும் சாட்சி இல்லை என்று அந்த கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கமலஹாசனும் தனது ஹே ராம் திரைப்படத்தில் காந்தியாரை கொல்ல பணவுதவி செய்யும் மன்னரை ஊரும் பெயரும் சொல்லாமல் மகாராஜா என்று மட்டுமே சொல்லுவார் ஆனால் மராட்டிய மாநிலம் என்று மட்டும் கொடு காட்டுவார்.
சாகேத் ராமனை இரண்டாம் மனைவியுடன் பார்த்த அபயங்கர் தன் பெயரை ராமச்சந்திர பாண்டே என்று மாற்றி சொல்லுவான், ஆனால் சாகேத் ராமனை காந்தியை கொல்லும் பணியில் சேர்க்கும் கடைசி கட்டம் வரை மகாராஜா என்று மட்டுமே சொல்லுவான் ராஜா பெயர் ஊர் சொல்ல மாட்டான்
(முடிந்தால் காந்தியார் ஏன் கொல்லப் படவேண்டும் என்ற கமலஹாசனின் வாகுமூலத்தை அந்த திரைப்படத்தில், தந்து இரண்டாம் மனைவியுடன் விமானத்தில் பயணிக்கும் காட்சியை பாருங்கள், தனது பார்பனிய கருத்தை அழுத்தம் திருத்தமாக தன் மனைவியிடம் சொல்லுவார்)
ஆக நாம் முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது, கமலஹாசன் மட்டுமல்ல ரஜினிகாந்தும் பார்பனர் தான்
அது போகட்டும், உங்களுக்கு அமிதாப்பச்சன் அப்பா அம்மா யார் என்று தெரியுமா என்று கேட்டேன், அவர்கள் உத்தரபிரதேசத்தில் ஒரு ஏழை விவசாயகுடும்பத்தை சேர்ந்தவர் அதனால் அந்த விபரங்கள் அதிகம் யாருக்கும் தெரியாது என்றார்.
அமிதாப்பச்சன் தாத்தாவின் பெயர் பிரதாப் நாராயன் ஸ்ரீவட்சவ், அவருக்கு இரண்டு பிள்ளைகள், எல்லோரும குடும்பத்தில் மூத்த பிள்ளையை ரஜ்ஜன் என்றும் இளைய பிள்ளையை பச்சன் என்றும் அழைப்பார்கள், அதாவது மூத்தவனே இளையவனே என்று அர்த்தம். இவர்கள் ஸ்ரீவட்சவ் என்ற சாதி பெயரை கொண்ட வங்காள கயஸ்தா பிராமணர்கள்.
இந்த வங்காள கயஸ்தா பிராமணர்கள் தங்களை சத்திரியர்கள் என்றும் சொல்லிக்கொள்வார்கள்.
இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று மற்ற பார்பனர் தொடுத்த வழக்கு, ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் (I.L.R.10 மற்றும் I.L.R.12) 1886 – ல் உள்ளது
இந்த வழக்கு மற்ற பார்பனருக்கும், வங்காள கயஸ்தா மற்றும் பீகாரின் கயஸ்தா பிரிவினர் இவர்களில் யார் சத்திரியர் என்று கிழக்கிந்திய கம்பெனி கோர்ட்களில் நடைபெறுகிறது
இந்த வழக்கு தீர்ப்பு வரும் போது கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷ் ஆட்சி வந்துவிட்டது.
இந்த வழக்கில் வங்காளத்தில் உள்ள கயஸ்தா பிரிவினர் சத்திரியர் தான் என்று தீர்ப்பு கிழக்கிந்திய கம்பெனி வழங்குகிறார்கள்
இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் மீண்டும் தொடுத்த வழக்கு, ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் (1916) 20 Cal. W.N.901
1916-ல் மறுபடியும் பார்பனர் வழக்கு தொடர்ந்து வங்காளத்தில் உள்ள கயஸ்தா பிரிவினர் சத்திரியர் அல்ல என்று ஆங்கிலேய கோர்டில் தீர்ப்பை பெறுகிறார்கள். இந்த வழக்கு 1926-ல் தான் முடிகிறது.
இப்படியாக ஸ்ரீவட்சவ் என்ற வங்காள கயஸ்தா சாதியினர் சூத்திரர்கள் என்று பார்பனர்கள் கோர்டில் தீர்ப்பு வாங்கிய காரணத்தால். பிரதாப் நாராயன் ஸ்ரீவட்சவ்-ன் இளையமகன் தன் பெயரை பொதுவெளியில் குறிப்பிடும் பொது ஹரிவன்ஷ் ஸ்ரீவட்சவ், என்பதற்கு பதில் ஹரிவன்ஷ் பச்சன் என்றே மாற்றிக்கொள்கிறார்.
அவர் அந்த காலகட்டத்தில் சோஷியலிஸ்ட் ஆன நேருவுடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் ஸ்ரீவட்சவ் என்ற சாதி பெயரை விட்டுவிட்டு (நேரு என்பதும் சாதி பெயர் அல்ல அதை எனது முந்தைய கட்டுரையில் பாருங்கள்) தனது வீட்டில் எல்லோரும் செல்லமாக அழைத்த பச்சன் என்ற பெயரை சாதி பெயர் போல சேர்த்து கொண்டார் என்றும் சொல்லுவார்கள்
இவர் இவரது ஹிந்தி புலமையால் நேருவின் அமைச்சரவையில், வெளிநாடுகளுக்கான ஹிந்தி வித்வான் என்ற பதவி பெற்றார் (சத்தியமாக எனக்கு புரியவில்லை என்ன பதவி என்று)
நேருவுடன் இருந்த நெருக்கம் காரணமாக அவரது மனைவி தேஜ் பச்சன் இந்திராவுடன் மிகவும் நெருக்கமானார்.
அதனால் இந்திராவின் மகன் ராஜீவ் மற்றும் தேஜ்-இன் மகன் அமிதாப் இருவரும் டூன் பள்ளியில் ஒன்றாக படித்தனர். இன்று டூன் பள்ளியில் உங்கள் பிள்ளை படிக்க வேண்டும் என்றால் வருடம் ரூ.10 லட்சம் ஆகும். அன்றும் அதற்கு சமமான ஒருதொகையை கட்டணமாக வருடாவருடம் கட்டும் அளவுக்கு பணக்கார குடும்பம் தான் பச்சன் குடும்பம்
அந்த பள்ளி, பிரிட்டிஷார் காலத்தில் ஆங்கிலேய உயர் அதிகாரிகள் பிள்ளைகள் படிக்க கட்டப் பட்ட பள்ளி.
அது போன்றொதொரு பள்ளி நமது ஊட்டியிலும் உள்ளது, யாராவது உங்கள் பிள்ளைக்கு வருடம் 5 லட்சம் கட்டி சென்னை படிக்கவைத்து கொண்டிருந்தால், உடனே உங்கள் பிள்ளையை அந்த பள்ளியில் இருந்து மாற்றி ஊட்டி லவ்டேல்-ல் இருக்கும் லாரன்ஸ் பள்ளிக்கு மாற்றிவிடுங்கள், வெளியே வரும் பொது உங்கள் மகன் / மகள் ஒரு ஐரோப்பியன் போல மாறியிருப்பார்கள்
அந்த பள்ளியில் இந்திராவின் மகன் ராஜீவ் மற்றும் தேஜ்-இன் மகன் அமிதாப் இருவரும் வகுப்புத் தோழர்கள்.
அந்த நட்பு ராஜீவ் இறக்கும்வரை தொடர்ந்தது.
இந்திரா தன் மூத்த மகன் ஒரு வெளிநாட்டு பெண்ணை மணந்து கொண்டால் பிற்காலத்தில் காங்கிரஸ் தலைமைக்கு வர அது இடைஞ்சலாக இருக்கும் என்று எண்ணி ராஜீவ் சோனியா காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த போது, அவரை சம்மதிக்க வைத்தது தேஜ் பச்சன் தான்.
ஜனவரி 13, 1968-ல் டில்லி பாலம் விமானநிலையத்தில் ராஜீவ் சோனியா இருவரையும் வரவேற்று நேராக தனது வீட்டுக்கு அழைத்து சென்றதே அமிதாப் தான்
1969-ல், புதுதில்லியில், ராஜீவ் சோனியா திருமணம் நடந்த இடமான 13, வெலிங்கடன் கிரசன்ட் பங்களா பச்சன் குடும்பத்தினருடையது. (உத்தரப்பிரதேசம் சேர்ந்த ஏழை விவசாய குடும்பம்)
ராஜீவ் பிரதமராக இருந்த போது அவர் வெளிநாட்டில் இருக்க, திடீரென ஞாபகம் வந்து அமிதாப்-க்கு போன் செய்கிறார், அமிதாப், அப்போது தான் ஷூட்டிங் முடிந்ததாக சொல்ல, (ஒகே மாப்பி வண்டி அனுப்புறேன் நேரா லீ க்ளப் வந்துரு, என்று நாம் சொல்வது போல) இந்திய விமானபடை ஹெலிகாப்டரை அனுப்ப அதை ஒரு பத்திரிக்கையாளர் போட்டோ எடுத்து நாளிதழில் வெளியிட பெரும் பஞ்சாயத்தாகிவிட்டது.
1984-ல் அமிதாப் அலகாபாத்தில் காங்கிரஸ் சார்பாக எம்.பி. தேர்தலில் நின்று வென்றபோது. அமிதாப் ராஜீவ் நட்பு புதிய உச்சம் தொட்டது,
அப்போது தில்லியின் காங்கிரஸ் இளைஞர் படை என்று சொல்லப்பட்ட சதீஷ் சர்மா, கமல்நாத், அருண் நேரு, அருண் சிங் மற்றும் அமிதாப் ஆகியோர் ராஜீவின் நேரடி தொடர்பில் இருந்த முக்கியமானவர்கள்.
1986-87-ல் போபார்ஸ் களேபரத்தின் காரணமாக அமிதாப் எம்.பி. பதிவியில் இருந்து விலகினார், அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அமிதாப் சுத்தமானவர் என்று இறுதியில் தீர்ப்பு வழங்கியது.
இந்த போபார்ஸ் விவகாரம் ராஜீவ் அமிதாப் நடப்பில் சிறு இடைவெளியை ஏற்படுத்தினாலும், இரு குடும்ப உறுப்பினர்களும் இணக்கமாகவே பழகி வந்தனர். பிரியங்காவின் திருமணத்தில் அமிதாப் குடும்பம் முன்னின்று எல்லா வேலைகளையும் செய்தது.
1991-ல் வெளியான ஹம் திரைப்படம் பெரிய அளவில் ஊத்திக் கொள்ள, அமிதாப் திரையுலகில் இருந்து கிட்டத்தட்ட ஒய்வு பெற்றுவிட்டார் என்றே சொல்லக் கூடிய ஒரு நிலை வந்தது.
அதே ஆண்டில் ராஜீவின் மரணம் இரு குடும்பத்தாருக்கும் நடுவே பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது.
ராஜீவ் குடும்பத்தினர், அவர் மறைவுக்கு பின் அமிதாப் சரியானபடி உடன் நிற்கவில்லை என்று குற்றம் சொல்ல, ABCL நிறுவனம் மாபெரும் கடன் மற்றும் நஷ்டத்தில் சிக்கியபோது, ராஜீவ் காந்தி குடும்பம் உதவிக்கு வரவில்லை என்று அமிதாப் குடும்பம் குற்றம் சொல்ல என்று இந்த இரண்டு குடும்பத்தின் நட்பு முடிவுக்கு வந்துவிடுகிறது.
அந்த நேரத்தில் பழைய நண்பரான அமர்சிங் ABCL நிறுவனம் சார்ந்த பிரச்சனைக்கு உதவிக்கு வர அதை தொடர்ந்து அந்த நடப்பின் நீட்சியாக ஜெயாபச்சன் இருமுறை சமாஜ்வாடி கட்சியின் சார்பாக ராஜ்யசபா எம்.பி. ஆக்கப்படுகிறார்.
இதன் காரணமாக ஜெயாபச்சன் மற்றும் ராகுல்காந்தி பொதுவெளியில் ஒருவர் குடும்பத்தை ஒருவர் திட்டும் அளவுக்கு செல்ல, நேரம் பார்த்து காத்திருந்த காங்கிரஸ் எதிரி பால்தாக்கரே அமிதாப்-க்கு ஆதரவு கரம் கொடுத்து அவரது சர்கார் படத்தை திரையிட உதவுகிறார்.
இந்த சண்டையின் உச்சகட்டமாக 2005, அமிதாப் குடல் பிரச்சனையால் மருத்துவமனையில் இருக்கும் போது காங்கிரஸ் அரசால், உடனே கட்டும்படி சொல்லி 4.5 கோடிக்கு வருமானவரி நோட்டிஸ் கொடுக்கபடுகிறது. அமிதாப் மருத்துவமனையில் இருந்தபடியே அதற்கு ஏற்பாடு செய்து பணம் கட்டுகிறார்.
இப்படியே தொடர்ந்து முலாயம் சிங் யாதவ், அமர்சிங் மற்றும் சமாஜ்வாடி கட்சிக்கு நெருக்கமாக இருந்த காரணத்தால் சுமார் 2010 வரை காங்கிரஸ் கட்சியால் பல நெருக்கடிகள் கொடுக்கப் பட்டது.
சரி எதோ ஐஸ்வர்யாராய் பற்றி சொல்கிறேன் என்று சொன்னீர்களே என்று கேட்கிறீர்களா. அது ஒன்றும் இல்லை.
ஐஸ்வர்யாராய் என்பவரும் கயஸ்தா பிராமணர் தான் ஆனால், இவர்கள் கர்நாடக மாநிலத்தில் செட்டில் ஆனவர்கள் துளு எனப்படும் திராவிட மொழி குடும்பத்தில் உள்ள மொழியை பேசும் பார்பனர்.
திருமணத்துக்கு பிறகு தன பெயரை ஐஸ்வர்யாராய் பச்சன் என்று மாற்றி கொண்டவர்.
சொல்ல மறந்துவிட்டேன் அமிதாப்பின் தந்தை பெயர் வெறும் ஹரிவன்ஷ் பச்சன் அல்ல
அவரது முழு பெயர் ஹரிவன்ஷ் ராய் ஸ்ரீவட்சவ் அல்லது ஹரிவன்ஷ் ராய் பச்சன் என்பதாகும்
இதில் இருந்து அமிதாப், உலக அழகி என்ற காரணத்தால் மட்டுமே எப்படி வேறு சாதியில் தன் மகனுக்கு பெண் எடுத்தார் என்று புரியும்.
அது தான் நீங்களே ஒத்துகிட்டீங்களே கெய்க்வாட் என்பது பரோடா அரசவம்சம், எனவே ரஜினிகாந்த் ஒரு ஆண்டபரம்பரை பார்பனர் அதனால் அவர்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று உங்களில் யாராவது சொல்ல நினைத்தாலே,
உங்களுக்கு கங்கைமுதல் குமரிவரை எதெல்லாம் பாவம் என்று சொல்கிறார்களோ அத்தனை பாவங்களும் உங்களை வந்தடையும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக