நக்கீனர் :சென்னையில் நடைபெற்ற ஹார்வார்டு
பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
கவிஞர் வைரமுத்து, ரூ.5லட்சம் நிதி வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில்
பேசிய அவர்,
புத்தக காட்சியில் விற்பனையான ரூ.4.51 லட்சத்துடன் கூடுதல் தொகை சேர்த்து ரூ.5லட்சம் வழங்கியுள்ளேன். ஏழைக் கவிஞன் என்பதால் தான் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.5லட்சம் கொடுத்துள்ளேன். தமிழ் செம்மொழி என்ற அறிவிப்புக்கு காரணமான திமுக தலைவர் கலைஞர், மன்மோகன் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நோபல் பரிசு பெற்ற பல அறிஞர்களை உண்டாக்கிய பல்கலைக்கழகம் ஹார்வர்டு. இதுவரைக்கும் ஹார்வர்டு இருக்கையில் இருக்கிற மொழிகள் எல்லாம் வாழும் என்று சொல்ல முடியாது. அறிவுலகம் வகுத்த தகுதிக்கும் மேல் தகுதி கொண்டது தமிழ்மொழி.
எல்லாத் தகுதியும் உடைய தமிழ் மொழியை ஹார்வர்டு பல்கலைகழகத்துக்கு தாமதமாக கொண்டு சென்றுள்ளோம். ஹார்வர்டு இருக்கையில் உள்ள 7 மொழிகளில் சீனத்துக்கு அடுத்து தமிழ் மட்டுமே பேச்சு வழக்கில் இருக்கிறது. என்றார்.ஆண்டாள் சர்ச்சைக்குப் பின் வைரமுத்து பங்கேற்கும் முதல் பொதுநிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக