வியாழன், 1 பிப்ரவரி, 2018

தினகரனின் புரட்சி பயணம் கமலின் நாளை நமதே ...

மின்னம்பலம் :தினகரனின் புரட்சிப்பயணம் “பிப்ரவரி 26-ம் தேதி கலாம் வீட்டில் இருந்து ‘நாளை நமதே’ என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கப் போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை வீட்டுக்கு அழைத்து அரசியல் சம்பந்தமான ஆலோசனையிலும் ஈடுபட்டுவருகிறார் கமல். இன்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளைச் சென்னைக்கு வரவழைத்துப் பேசினார்.
டிஜிட்டல் திண்ணை: கமலுக்கு முன்பு கிளம்பணும்!‘திருவள்ளூர்   மாவட்டத்துல நம்ம நற்பணி இயக்கம் எவ்வளவு இருக்கு? அதுல எவ்வளவு பேர் உறுப்பினர்களாக இருக்காங்க?’ என்றுதான் ஆரம்பித்திருக்கிறார். அதற்கு நிர்வாகிகளிடமிருந்து பதில், வர வர, அவற்றை கமலின் ஆலோசகர்கள் குறிப்பெடுத்தபடியே இருந்தார்கள். ‘சினிமா பார்த்து ரசித்து எனக்கு ரசிகர்களாக மாறியவங்க நீங்க. இப்போ நாம எடுத்து வைக்கப்போற அடுத்த அடி சினிமா இல்லை. இது அரசியல். சினிமா மாதிரி இங்கே படம் ரிலீஸ் ஆகும்போது மட்டும் தியேட்டருக்குப் போய்ட்டு கத்திட்டு வர வேலை இல்லை. முழு அர்ப்பணிப்போடு எல்லோரும் செயல்படணும்.
இதுவரைக்கும் மன்றத்தில் ஆட்களை சேருங்க என நான் உங்க யாருகிட்டயும் சொன்னது இல்லை. இனி அப்படி இருக்க முடியாது. சினிமாவைத் தாண்டிய சாமானிய மக்களையும் உள்ளே கொண்டுவரணும்.
நான் உங்களோடுதான் பேச முடியும். நீங்கதான் மக்களோடு பேச முடியும். நிறைய பேசுங்க... உங்களுக்கு என்ன தேவை என்றாலும் மூர்த்திகிட்ட சொல்லுங்க. அவர் என்னோட கவனத்துக்கு கொண்டுவந்துடுவாரு. தேவைப்பட்டால் நானே உங்களை கூப்பிட்டுப் பேசுறேன்..’ என்று சொல்லியிருக்கிறார் கமல்.
நிர்வாகிகள் சிலர் கேள்வி கேட்க, அதற்கு பதிலும் சொன்னாராம் கமல். ‘கடந்த 23 வருஷமா நான் மன்றத்துல இருக்கேன். இதுவரைக்கும் பத்து ரூபாய் யாருகிட்டயும் கைநீட்டி வாங்கியது இல்ல. கைக்காசை போட்டுத்தான் செலவு பண்னிட்டு இருக்கேன். நாளைக்கு நீங்க கட்சி ஆரம்பிச்ச பிறகு, எங்களை மாதிரி ஆட்களையெல்லாம் விட்டுட்டு புதுசா வந்தவங்களை கூட வெச்சுகிட்டா நாங்க பட்ட கஷ்டம் எல்லாம் எதுக்குன்னு ஆகிடும். எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பீங்களா?’ என ஓப்பனாகவே கேட்டாராம். அதற்கு கமல், ‘முதலில் மன்றத்தில் இருக்கிறவங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதுக்குப் பிறகுதான் வெளி ஆட்கள். அதனால எதையும் நீங்க யோசிக்காதீங்க...’ என கமல் சொன்னாராம். இப்படித்தான் இன்றைய கூட்டம் நகர்ந்திருக்கிறது” என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது.
“கமல் பயணம் இப்படியாக இருக்க...‘மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம்’ என்று பிப்ரவரி 2ஆம் தேதியிலிருந்து மாவட்ட வாரியாகப் புறப்படுகிறார் தினகரன். தஞ்சையிலிருந்து பயணம் தொடங்குகிறது. ‘கமலுக்கு முன்னாடி நாம பயணத்தைத் தொடங்கிடணும்’ என்று சொல்லித்தான் 2ஆம் தேதி நாள் குறித்திருக்கிறார் தினகரன். சசிகலாவின் மாவட்டமான தஞ்சையிலிருந்து தொடங்கலாம் என்பதுதான் தினகரன் திட்டம். இந்தப் பயணத்தில், உண்மையான அதிமுக என்பது நாங்கள்தான் என்பதை வலியுறுத்தியும், எடப்பாடியும், பன்னீரும் ஜெயலலிதாவுக்கு என்னவெல்லாம் துரோகம் செய்தார்கள் என்பதை எடுத்துச் சொல்லியும் பேசுவதுதான் தினகரன் திட்டமாம். அதேபோல, கமல் அட்டாக்கையும் தனது பேச்சில் எடுத்து வைக்கப்போகிறாராம். தனது அரசியல் பயணத்தில் கமலின் குறுக்கீடு அதிகம் இருக்கும் என நினைக்கிறாராம் தினகரன். அதனால்தான் கமலுக்கு முன்பாக புரட்சிப் பயணத்தைத் தொடங்கிவிட்டார் என்கிறார்கள்” என்று

கருத்துகள் இல்லை: