தினத்தந்தி :காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் ஆம்புலன்ஸ் ஒன்றை தீவிரவாதிகள் வெடிக்க செய்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தில் 158 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதுபற்றி சம்பவம் நடந்த பகுதியருகே இருந்த அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான மீர்வாயிஸ் யாசினி கூறும்பொழுது, ஆம்புலன்ஸ் ஒன்று சோதனை சாவடி அருகே வந்தபொழுது வெடிக்க செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.
உள்துறை அமைச்சகத்தினை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
ஆனால் சாலையில் இருந்த பொதுமக்களே தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். கடைகள், சந்தைகள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் தாக்குதல் நடந்துள்ளது.‘ இந்த சம்பவத்திற்கு தலீபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த வாரம் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் மீது தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக