மாலைமலர் :மத்திய அரசின் பட்ஜெட் ஏழைகளுக்கு எதிராக
அமைந்துள்ளது என பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்
கட்சிகள்
குற்றம் சாட்டியுள்ளன.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில்
நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
விவசாயிகள் மற்றும் பெண்களின் நலன்களில் அக்கறை கொண்டு இந்த பட்ஜெட்
தயாரிக்கப்பட்டுள்ளது என ஆளும் கட்சி தெரிவித்தது.<
இந்நிலையில்,
மத்திய அரசின் பட்ஜெட் ஏழைகளுக்கு எதிராக அமைந்துள்ளது என பகுஜன் சமாஜ்,
திரிணாமுல் உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி:
மத்திய அரசு சமர்ப்பித்துள்ள பட்ஜெட் படுதோல்வி அடைந்துள்ளது. அரசு தனது கடைசி நாள்களை எண்ணிக் கொண்டிருப்பதையே இந்த பட்ஜெட் வெளிப்படுத்தியுள்ளது
மத்திய பட்ஜெட் கடந்த கால பட்ஜெட்களை போலவே ஏழைகளுக்கு எதிராகவும், கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது.
கடந்த
பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி விரைவில் நல்ல நாள் வரும் என
உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதி என்னவானது? என கேள்வி
எழுப்பியுள்ளார்.
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்:
மத்திய
அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய பட்ஜெட்டை தயார்
செய்துள்ளது. இந்த பட்ஜெட்டில் தலைநகர் டெல்லிக்கு தேவையான பொருளாதார
நிதியுதவி மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நிதிகளை
அதிகளவில் எதிர்பார்த்தோம். ஆனால் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரக் ஓ பிரையன்:
மத்திய அரசு சமர்ப்பித்துள்ள பட்ஜெட் படுதோல்வி அடைந்துள்ளது. அரசு தனது கடைசி நாள்களை எண்ணிக் கொண்டிருப்பதையே இந்த பட்ஜெட் வெளிப்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக