வியாழன், 5 ஜனவரி, 2012

பத்மநாப சுவாமி கோயில் வழக்கு : கேரள அரசிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

திருவனந்தபும்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத கேரள அரசுக்கும் கோயில் நிர்வாகத்திற்கும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பத்மநாப சுவாமி கோயிலில் கிடைத்த பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவிற்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும், பாதாள அறைகளை சுற்றி பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாத கேரள அரசுக்கு நீதிபதிகள் ஆர்.எம். லோத்தா, ஈ. கே. பட்நாயக் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: