சென்னை : தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5.4 கோடி பேர் இடம் பெற்றுள்ளனர். 31 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 24ம் தேதி வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் பெயர், திருத்தம், முகவரி மாற்றத்துக்காக நவம்பர் 11ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.இதில், ஏராளமானோர் ஆர்வத்துடன் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். இந்த விண்ணப்ப படிவங்களை தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடுடாக சென்று முழுமையாக ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து வாக்காளர்களின் முழு விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை தமிழகம் முழுவதும் 234 சட்டப் பேரவை தொகுதிகளிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று அளித்த பேட்டி:
கடந்த அக்டோபர் 24ம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 4 கோடியே 73 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் இருந்தனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 38 லட்சத்து 8 ஆயிரம் பேர், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 35 லட்சத்து 49 ஆயிரம் பேர், இதர வாக்காளர்கள் 1,568 பேர் அடங்குவர். இந்நிலையில் சுருக்க முறை திருத்தத்தின் போது பட்டியலில் பெயர் சேர்க்க 38.98 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவற்றில் 33.26 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
வாக்காளர் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் ஒரே வாக்காளர் பெயர் ஒரு முறைக்கு மேல் இடம் பெற்றிருத்தல் போன்ற காரணங்களுக்காக 2.53 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நேற்று வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் தற்போது 5 கோடியே 4 லட்சத்து 31 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 53 லட்சத்து 35 ஆயிரம் பேர், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 50 லட்சத்து 93 ஆயிரம் பேர். இதர வாக்காளர்கள் 2,175 பேர் அடங்குவர். இதில், 21 பேர் வெளிநாடுவாழ் வாக்காளர்களும் அடங்குவர்.
புதிதாக பட்டியலில் 30.72 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 18&19 வயது வரை உள்ளவர்கள் 16 லட்சம் பேர். மாவட்ட அளவில் திருப்பூரில் 10 சதவீதம் பேரும், குறைந்த பட்சமாக அரியலூரில் 3.78 சதவீதம் பேரும் கூடுதலாக பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொகுதி அடிப்படையில் அதிகபட்சமாக சோளிங்கநல்லூரில் 13.47 சதவீத பேரும், பத்மநாபபுரத்தில் 8 சதவீதம் வாக்காளர்களும் கூடுதலாக பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சென்னையில் கூடுதலாக 6.6 சதவீதம் பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழக மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் 99.87 சதவீதம் அளவுக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் 60 ஆயிரம் பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,300 பேரும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்டோருக்கு தேசிய வாக்காளர் தினமான வரும் 25ம் தேதி புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்கு சாவடி அமைவிடங்கள், அந்தந்த மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம். இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
வாக்காளர் பட்டியலை எங்கெங்கு பார்க்கலாம்
இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் மற்றும் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம். மேலும், ஷ்ஷ்ஷ்.மீறீமீநீtவீஷீஸீs.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணைய தளத்திலும் பார்வையிட்டு தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
25ம் தேதி வினியோகம்
ர் மொத்தம் 234 சட்டப் பேரவை தொகுதிகள்.
ர் மொத்த வாக்காளர் 5,04,31,000. இதில், ஆண்கள் 2 கோடியே 53 லட்சத்து 35 ஆயிரம், பெண்கள் 2 கோடியே 50 லட்சத்து 93 ஆயிரம். இதர வாக்காளர்கள் 2,175. இதில், 21 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்.
ர் தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் 68 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் 99.87 சதவீதம் தயாரிப்பு.
ர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டோருக்கு தேசிய வாக்காளர் தினமான ஜன.25ம் தேதி புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
உங்களுக்கு 18 வயதா?
இந்திய தேர்தல் ஆணையம் 18&19 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம் ஒன்றை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த முகாம் தமிழ்நாட்டில் 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. 1.1.2012 அன்று தகுதியடைந்து, வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்து கொள்ளலாம். கல்லூரி மாணவர்களை அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பிரவீன்குமார் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக