வியாழன், 5 ஜனவரி, 2012

சிங்கப்பூர் அரசியல்வாதிகள் சம்பளம் பாதியாகக் குறைப்பு: அரசு அதிரடி

சிங்கப்பூர்: உலகிலேயே மிக அதிகளவு சம்பளம் வாங்கும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம், பாதியாகக் குறைக்கப்பட உள்ளது. அந்நிலையிலும் கூட அவர்கள் தான் உலகில் அதிகளவில் சம்பளம் வாங்கும் அரசியல்வாதிகளாக உள்ளனர். உலகிலேயே சிங்கப்பூர் அரசியல்வாதிகள் தான் மிக அதிகளவில் சம்பளம் வாங்குகின்றனர். அந்நாட்டு பிரதமர் லீ செயின் லூங், ஆண்டுக்கு 23 லட்சம் டாலர் சம்பளம் பெறுகிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா கூட ஆண்டுக்கு வெறும் 4 லட்சம் டாலர் மட்டும் தான் சம்பளம் வாங்குகிறார்.
இந்நிலையில், சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளத்தைக் குறைப்பது குறித்து அரசு ஒரு குழுவை நியமித்தது. அக்குழு, பிரதமரின் சம்பளத்தில், 336 சதவீதம், அதிபருக்கு 51 சதவீதம், அமைச்சர்களுக்கு 37 சதவீதம் குறைக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை, இம்மாதம் பார்லிமென்ட்டில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். இவ்வளவு குறைத்த பின்பும் கூட சிங்கப்பூர் பிரதமர் 17 லட்சம் டாலர் சம்பளம் வாங்குவார்.
சிங்கப்பூர் அரசியல்வாதிகள் தொடர்ந்து உலகில் அதிகளவில் சம்பளம் பெறும் பட்டியலில் இருப்பர்.
உலகளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், சிங்கப்பூரில் ஏழை, பணக்காரர் வித்தியாசம் அதிகரிப்பு ஆகியவற்றால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.' இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: