சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் 24 மணி நேர ஆக்ஷன் மூவி சேனல்களை சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனம் தொடங்கியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனம், புதிதாக 4 ஆக்ஷன் மூவி சேனல்களை நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது. ‘சன் ஆக்ஷன்’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெமினி ஆக்ஷன்’ என்ற பெயரில் தெலுங்கிலும், ‘சூரியன் டி.வி’ என்ற பெயரில் கன்னடத்திலும், ‘சூர்யா ஆக்ஷன்’ என்ற பெயரில் மலையாளத்திலும் துவங்கப்பட்டுள்ள இந்த சேனல்கள் 24 மணி நேர சேனல்கள். விளம்பர இடையூறு இல்லாத இந்த மூவி சேனல்கள், கட்டண சேனல்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், முதல் முறையாக விளம்பரம் இல்லாமல் ஒளிபரப்பு செய்யப்படும் 24 மணி நேர ஆக்ஷன் மூவி சேனல்கள் என்ற பெருமையை இந்த புதிய சேனல்கள் பெறுகின்றன. இந்த புதிய சேனல் களையும் சேர்த்து, சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனத்தில் உள்ள சேனல்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 10 தமிழ் சேனல்கள், 8 தெலுங்கு சேனல்கள், 7 கன்னட சேனல்கள், 4 மலையாள சேனல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனம், புதிதாக 4 ஆக்ஷன் மூவி சேனல்களை நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது. ‘சன் ஆக்ஷன்’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெமினி ஆக்ஷன்’ என்ற பெயரில் தெலுங்கிலும், ‘சூரியன் டி.வி’ என்ற பெயரில் கன்னடத்திலும், ‘சூர்யா ஆக்ஷன்’ என்ற பெயரில் மலையாளத்திலும் துவங்கப்பட்டுள்ள இந்த சேனல்கள் 24 மணி நேர சேனல்கள். விளம்பர இடையூறு இல்லாத இந்த மூவி சேனல்கள், கட்டண சேனல்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக