திங்கள், 2 ஜனவரி, 2012

வாச்சாத்தி' படத்திற்கு இயக்குநர்கள் சங்கம் முழு ஆதரவு - அமீர் அறிவிப்பு


 'வாச்சாத்தி' படத்திற்கு இயக்குநர்கள் சங்கம் முழு ஆதரவு - அமீர் அறிவிப்புசென்னை, டிச.31 (டிஎன்எஸ்) மலைவாழ் மக்கள் வாழும் வாச்சாத்தியில் நடந்த உண்மை சம்பவத்தைக் கருவாக கொண்டு உருவாகும் 'வாச்சாத்தி' படத்திற்கு இயக்குநர்கள் சங்கம் முழு ஆதரவு கொடுக்கும் என்று இயக்குநர் அமீர் கூறியிருக்கிறார்.
1992ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம், அரூர் தாலுக்காவில் உள்ள மலைவாழ் மக்கள் வாழும் கிராமமான வாச்சாத்தியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை படமாக உருவாக்குகிறார்கள்.
குமாரி டாக்கீஸ் மற்றும் ரெத்னா பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்டை ரவிதம்பி என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். ரெத்னா ரமேஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் தர்ஷணா ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள்.

ஜாக்ஸன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று (டிச.31) சென்னை, பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் அமீர், எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு, வாச்சாத்தி வழக்கை விசாரனை செய்த சி.பி.ஐ அதிகாரி ஜனநாதன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய அமீர், 'வாச்சாத்தி' போன்ற உண்மை சம்பவத்தை படமாக்குவது வரவேற்கக்கூடிய விஷயம். இதுபோன்ற படங்களை நாங்கள் இயக்கியிருக்க வேண்டும். அதை பண்ணாமல் போனதற்கு நான் இங்கே எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படிப்பட்ட படத்தை எங்களால் எடுக்கத்தான் முடியவில்லை என்றாலும், இந்த படத்திற்கு எங்களது இயக்குநர்கள் சங்கம் பெரிதும் பக்கபலமாக இருந்து இதன் வெற்றிக்கு முழு ஆதரவை கொடுப்போம்." என்று கூறினார்.

20வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் நடைபெற்ற ஊரிலேயே, சம்பவம் நடந்த இடத்திலேயே இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பாதிக்கப்பட்ட சிலரும் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை எடுக்கும் போது ஆரூர் வனச் சரகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதுடன், படப்பிடிப்புக் குழுவினர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் வனத்துறையினர் கவனித்து வந்தார்களாம். இந்த படத்தை வெளியிட விடமாட்டோ ம் என்று சிலர் தொலைபேசியிலும் மிரட்டினார்களாம். இப்படி பல எதிர்ப்புகளுக்கு இடையே வாச்சாத்தி கிராம மக்களின் உதவியுடன் படத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். (டிஎன்எஸ்)

கருத்துகள் இல்லை: