செவ்வாய், 3 ஜனவரி, 2012

5,750 கோடி ரத்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி: நிராகரித்தார் ஒபாமா

வாஷிங்டன் : பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவியாக ரூ.5,750 கோடி அளிப்பதை தடை செய்யும் சட்ட மசோதாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்டார். இதனால், இருதரப்பு உறவில் விரிசல் அதிகரித்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான சர்வதேச போரில் அமெரிக்காவுடன் பாகிஸ்தானும் இணைந்து செயல்படுவதாக கூறப்பட்டது. விரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவத்துக்கு ரூ.5,750 கோடி நிதியுதவி அளிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டது. சந்தேகத்தின் பேரில் பிடிபடும் தீவிரவாதிகளை காவலில் வைத்திருத்தல், விசாரணை மற்றும் வழக்கு தொடர்தல் ஆகிய நடைமுறைகளில் ராணுவத்துக்கு உதவ இந்த நிதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சமீப காலமாக பாகிஸ் தான் & அமெரிக்கா இடையே உறவு சீர்கெட்டுள்ளது. பாகிஸ் தான் எல்லை பகுதியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியா கினர். அதற்கு பாகிஸ் தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், அமெரிக்காவுடன் உறவை கைவிட தயாரில்லை.

இந்த நிலை யில், இனி அமெரிக்க படைகளை திருப்பி தாக்க அரசின் அனுமதியை வீரர்கள் பெறத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி தன்னிச்சையாக அறிவித்தார். இதனால், இருதரப்பு உறவில் மேலும் சிக்கல் ஏற்பட்டது. பாகிஸ்தானிலும் அது உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான சூழலில், ஹவாய் தீவில் புத்தாண்டு விடுமுறையை கழித்து வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா, பாகிஸ்தானுக்கு நிதியுதவியை தடை செய்யும் மசோதாவில் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் பலியாக காரணமாக உள்ள ஐஇடி எனப்படும் உள்நாட்டில் தயாராகும் வெடிகுண்டுகள் பாகிஸ்தானில் இருந்துதான் வருகின்றன. சட்ட விரோதமாக இந்த குண்டுகள் தயாரிப்பதை தடுக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்த நிதியுதவி அளிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: