புதுடில்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டில்லி நொய்டாவைச் சேர்ந்த பல் டாக்டர் ராஜேஷ் தல்வாரின் மகள் ஆருஷி என்ற 14 வயது மாணவி கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு முதலில் மாநில சி.ஐ.டி. விசாரித்து பின்னர் சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சி.பி.ஐ., ராஜேஷ்தல்வார், அவரது நண்பர், ராஜேஷ் வீட்டில் வேலை பார்த்த மேலும் 2 பணியாட்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.குற்றவாளி யார் என்பது பற்றி எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில், சி.பி.ஐ. தனது விசாரணையை முடித்துக்கொண்டது. இந்நிலையில் ஆருஷி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கும் படி மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி உத்தரவிட்டார். இதனால் சி.பி.ஐ. இந்த கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கியது. விசாரணையில் ஆருஷியின் பெற்றோர்களுக்கு கொலையில் முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ், நுபூர் தல்வார் இருவரும் முக்கிய குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆருஷி கொலை வழக்கு விசாரணையை தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது. இந்நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, ஆருஷியின் பெற்றோர்கள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், விசாரணையை தொடர அனுமதி வழங்கியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக