சென்னை: ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மர்ம மனிதர்களால் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி ஜெயேந்திரர் உள்பட 10 பேர் வரும் 12ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் சென்னை மந்தவெளியில் வசித்து வருகின்றார். கடந்த 2002ம் ஆண்டு அவர் வீட்டில் வைத்தே அவரை சில மர்ம மனிதர்கள் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் காஞ்சி ஜெயேந்திரர் விஜயேந்திரர், சுந்தரேச ஐயர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட விவகாரத்திலும் காஞ்சி ஜெயேந்திரருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து காஞ்சி ஜெயேந்திரர், சுந்தரேச ஐயர், ரகு கதிரவன், சுந்தர், ஆனந்த் லட்சுமணன், பூமிநாதன், குமரன், ரவிசுப்பிரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ரவிசுப்பிமணியம் மட்டும் அப்ரூவராக மாறினார். இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு நேற்று நீதிபதி கலாவதி முன்பு விசாரணைக்கு வந்தபோது சுந்தரேச ஐயர், ரகு, லட்சுமணன், பூமிநாதன், குமரன் ஆகியோர் மட்டும் ஆஜரானார்கள். மற்றவர்கள் ஆஜராவதற்கு விலக்களிக்கும்படி அவர்களது வழக்கறிஞர்கள் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கின் சாட்சி விசாரணை வரும் 12ம் தேதி முதல் தொடங்கும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கின் அப்ரூவர் ரவி சுப்பிரமணியத்தை அன்று ஆஜர்படுத்த வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி ஜெயேந்திரர், சுந்தரேச ஐயர் உள்பட 10 பேர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் மேலும் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக