முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக 8ம் தேதி அணைக்கு அருகில், அனைத்து இயக்குனர்களும் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்த உண்ணாவிரதத்தில் நடிகர்&நடிகைகள், பெப்சி அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று இயக்குனர்கள் சங்கம் சார்பில், கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆலோசிப்பதற்காக, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம், நேற்று இரவு ஆந்திரா கிளப்பில் நடந்தது. இதில் ராதாரவி, வாகை சந்திரசேகர், சத்யராஜ், குமரிமுத்து, சத்யப்பிரியா, கே.ராஜன், பசி சத்யா, கே.என்.காளை, கே.ஆர்.செல்வராஜ், ஜெயமணி, பூச்சி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிறகு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக இயக்குனர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பி இருக்கின்றனர். அவர்களுக்கு நடிகர் சங்கத்தின் ஆதரவு உண்டு. மேலும், முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர்&நடிகைகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். சென்னையில் எங்கு, எப்போது நடைபெறும் என்பதை ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளோம். இவ்வாறு சரத்குமார் கூறினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக