வெள்ளி, 6 ஜனவரி, 2012

ஆர்யா: கேரளாவில் ரிலீஸ் பண்ண முடியலேன்னா பரவால்ல... நான் நஷ்ட ஈடு தர்றேன்!


Vettai Movie
தான் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள வேட்டை படத்தை கேரளாவில் ரிலீஸ் பண்ண முடியாவிட்டால் பரவாயில்லை. அதற்கான நஷ்ட ஈட்டை என் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளுங்கள், என நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.
வேட்டை படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதில் ஆர்யா - அமலா பால் ஜோடியாக நடித்துள்ளனர். மற்றொரு ஜோடியாக மாதவன் - சமீரா நடித்துள்ளனர்.
ஆர்யா, மாதவன் இருவருமே கேரள தொடர்பு உடையவர்கள்தான்.
இப்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை காரணமாக இவர்களது வேட்டை படம் அங்கே ரிலீசாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரும் இயக்கநருமான லிங்குசாமி பெரும் குழப்பத்தில் இருந்ததால், நடிகர் ஆர்யா அவருக்கு ஒரு யோசனை கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுமூக நிலை ஏற்பட்டு, படத்தை வெளியிட முடிந்தால் கேரளாவில் வெளியிடலாம். இல்லாவிட்டால் வெளியிட வேண்டாம். கேரளாவில் ரிலீசாகாததால் ஏற்படும் நஷ்டத்தை சரிகட்ட எனது சம்பளத்திலிருந்து ஒரு தொகையை பிடித்துக் கொள்ளுங்கள்," என்றாராம்.

கருத்துகள் இல்லை: