புதன், 4 ஜனவரி, 2012

இந்தி அன்னிய மொழியே! குஜராத் நீதிமன்றம் கருத்து!!

அகமதாபாத், ஜன 4- இந்தி அன்னிய மொழி தான். அந்த மொழியில் வெளியிட்ட அறிவிப்பை மாற்றி மாநில மொழி யில் வெளியிட வேண் டும் என்று தேசிய  நெடுஞ் சாலை ஆணையகத்திற்கு குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் ராஜ் காட் மற்றும் ஜூனா காட் ஆகிய பகுதிகளில் இருவழிப்பாதையாக இருந்த தேசிய நெடுஞ் சாலையை நான்கு வழிப் பாதையாக மாற்றுவதற் கான அறிவிப்பை கடந்த ஆண்டு தேசிய நெடுஞ் சாலை ஆணையகம் வெளியிட்டது.

செல்வாக்குமிக்கவர்களின் தலையீடு
இதை எதிர்த்து ராஜ் காட் மற்றும் ஜூனா காட் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சங்கம் சார்பில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது. அதில், தங்களது நிலம் கையகப்படுத்தப்பட் டது முறையற்றது என் றும், செல்வாக்குமிக்க வர்களின் தலையீடே இதற்கு காரணம் என் றும் குற்றம் சாட்டியிருந் தனர்.
மேலும், தேசிய நெடுஞ் சாலை சட்டவிதிகள் 3(ஏ)  3 இன் படி பழைய திட்டங்களில் மாற்றம் செய்யப்படும் போது குஜராத்தி மொழியில் தான் அறிவிக்கை வெளி யிடப்பட்டு இருக்க வேண்டும். அதற்கு மாறாக இந்தியில் வெளியிடப் பட்டுள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண் டும் என்றும் கூறியிருந் தனர். இந்த வழக்கை நீதிபதி வி.எம்.ஷகாய் விசாரித்து அளித்த தீர்ப் பில் தேசிய நெடுஞ் சாலை ஆணையகம் குஜராத்தி மொழியில் அறிவிக்கை வெளியிடா தது தவறு என்றும், இந்தியில் வெளியிட்ட அறிவிக்கை செல்லாது என்றும் கூறப்பட்டுள் ளது. ஆனால் நெடுஞ் சாலைத்துறையின் திட் டத்திற்கு தடை விதிக் கப்படவில்லை.
இந்தி அன்னிய மொழி
மேலும், குஜராத் மாநில அரசால் ஆரம்ப பள்ளிகளில் குஜராத்தி மொழியே போதிக்கப் படுகிறது. இம்மாநிலத் தில் பொதுவாக குஜராத் தியே பேசப்படுகிறது. இந்தி பேசப்படுவது இல்லை. இந்த அடிப் படையில் இந்தி ஒரு அன்னிய மொழிதான் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: