கோலிவுட், பாலிவுட் என மாறி மாறி நடித்து ரசிகர்களை தனது கவர்ச்சியால் கட்டிப் போட்டிருக்கும் நடிகை சமீரா ரெட்டியிடம் கிரெடிட் கார்டு மோசடி நடந்துள்ளது. சுமார் 4 லட்சம் ரூபாய் வரை அவரது கணக்கில் இருந்து பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி சம்பவம் குறித்து சமீரா அளித்துள்ள பேட்டியில், சமீபத்தில் எனது மொபைலுக்கு பேசிய ஒரு நபர், தன்னை அமெரிக்க வாழ் இந்தியர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுத்து விட்டதாக தெரிவித்தார்.
இதனால் குழம்பிப் போன நான் என்னுடைய கிரெடிட் கார்டு கணக்கை சரிபார்த்தேன். சுமார் ரூ.4 லட்சம் பணம் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் மீண்டும் அந்த நபரிடம் பேசினேன். அப்போது பேசிய நபர், பணம் எடுத்த பிறகு கவனித்தபோதுதான் உங்கள் பெயரில் அக்கவுண்ட் இருந்தது தெரிந்தது. நான் உங்கள் ரசிகன். எனவே நான் எடுத்த பணத்தை உங்கள் அக்கவுண்ட்டிலேயே போட்டு விட்டேன். நண்பர்கள் எடுத்த பணத்ததிற்கு நான் பொறுப்பாக மாட்டேன், என்றார். அதோடு கிரெடிட் கார்டை பயன்படுத்துவது குறித்த டிப்ஸ்களையும் அந்த நபர் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவர் எனது கணக்கில் ரூ.1 லட்சம் போட்டு விட்டார். மீதி 3 லட்சம் ரூபாய் அபேசாகி விட்டது, என்று என்றார்.. மேலும் இனிமேல் கிரேடிட் கார்ட் போன்றவைகளை உபயோகிக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக